யாழ்ப்பாணத்தில் வர்த்தக நிலையங்களுக்கு பெயர்ப் பலகைகள் தயாரித்துக் கொடுப்பதை தனது தொழிலாகக் கொண்ட ஓவியர் ஒருவர் கொழும்புக்கு வந்திருந்தார்.
அவரின் தொழில் நிலைவரம்பற்றி விசாரித்தபோது, "இப்போது எவருமே பெயர்ப்பலகை தயாரிப்பதில் அக்கறை காட்டுவதில்லை" என்றார்.
அப்படியென்றால் ஓவியர் என்ற வகையில் அவருக்கு வருமானம் எதுவும் கிடைப்பதில்லையா என்று கேட்டபோது, வருவாய்க்கு குறைவில்லை என்று உற்சாகமாகச் சொன்னார்.
"அரிசி விலை, சீனி விலை போன்ற உணவு மற்றும் பொருட்களின் விலைகளை காகித அட்டைகளில் எழுதித் தரும்படி கேட்டு வருகிறார்கள். மலிவு விலைகள் என்பதையும் குறிப்பிட்டாக வேண்டும். மக்களும் இவற்றைப் பார்த்து எங்கு மலிவான விலைகளில் பொருட்கள் கிடைக்கின்றனவோ அங்கே நாடிச் செல்கிறார்கள்" என்று அந்த ஓவியர் தெரிவித்தார்.
தேவையில் பிறப்பது சந்தர்ப்பம்!