Thinakkural Tamil News Paper - The Independent Voice in Tamil

The Independent Voice in Tamil
Tuesday, March 04, 2008


Download latha tamil font
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
  Sri Lanka Forecast
 
 
 
 
 
 
 
HOT NEWS
Foreign News
இந்தியாவில் வசிக்கும் அமெரிக்கர்களில் பெரும்பாலானோர் ஒபாமாவிற்கு ஆதரவு
[04 - March - 2008] [Font Size - A - A - A]
இந்தியாவில் வசிக்கும் அமெரிக்கர்களில் பெரும்பாலானோர் அமெரிக்க ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிட பராக் ஒபாமாவையே வேட்பாளராகத் தெரிவு செய்துள்ளனர்.

அமெரிக்க ஜனநாயகக் கட்சி சார்பில் அதிபர் தேர்தலில் போட்டியிடக் கூடிய வேட்பாளர் தேர்வு அந்நாட்டில் எல்லா மாகாணங்களிலும் நடந்து வருகிறது.

அக்கட்சியைச் சேர்ந்த ஹிலாரி கிளின்டன் மற்றும் பராக் ஒபாமா இடையே கடும் போட்டி நீடிக்கிறது.

இந்நிலையில் இந்தியாவில் வசிக்கும் அமெரிக்கர்கள் (ஜனநாயகக் கட்சியைச் சேர்ந்தவர்கள்) யாரை ஆதரிக்கிறார்கள் என்று அறிய டில்லியில் வாக்குப்பதிவு நடந்தது.

வாக்களித்த 343 அமெரிக்கர்களில் 73 சதவீதம் பேர் ஒபாமாவை ஆதரித்துள்ளனர்.

மும்பையில் வசிக்கும் அமெரிக்க பெண் ஒருவர் வாக்களிப்பதற்காகவே விமானத்தில் டில்லிக்கு வந்து சென்றுள்ளார்.

160 நாடுகளில் வசிக்கும் அமெரிக்கர்களிடையே நடந்த இதுபோன்ற தேர்தலில் ஒபாமாவே முன்னிலையில் இருக்கிறார். வெளிநாடு வாழ் அமெரிக்கர்களில் 23,000 பேர் வாக்களித்தனர். அவர்களில் 65.8 பேர் சதவீதம் ஒபாமாவை ஆதரித்துள்ளனர்.

Email this page Your Opinion Print this page
சர்வதேச கண்டனங்களுக்கு மத்தியிலும் காஸா மீது இஸ்ரேல் தொடர்ந்து தாக்குதல்
ஆப்கான் போரில் ஈடுபட்டிருந்த இளவரசர் ஹரி பிரிட்டன் திரும்பினார்
மக்களைப் பயமுறுத்தி வாக்குகளை பெறும் முயற்சியில் ஹிலாரி
பாகிஸ்தான் சிறையில் 35 ஆண்டுகள் வாடிய இந்தியரை விடுவிக்க அரசாங்கம் முடிவு
இன்னும் 10 ஆண்டுகளில் போர்க்களத்தில் ரோபோக்கள்
மைக்ரோசொப்ட் மீது ஐரோப்பிய ஆணையம் அபராதம் விதிப்பு
நவாஸ் ஷெரீப்பின் சகோதரர் கொலை வழக்கிலிருந்து விடுதலை
இந்தியாவில் வசிக்கும் அமெரிக்கர்களில் பெரும்பாலானோர் ஒபாமாவிற்கு ஆதரவு
 
 
 
   
 
 
   
Home - Important News - Foreign News - Sports News - Sinhala News - Articles - Editorial - DR - Cartoon - Archives - Obituaries
© 2008. All Rights Reserved. Thinakkural.com / Thinakural.com - Site By Evosof.com