பாகிஸ்தானில் 1998 ஆம் ஆண்டு ஐந்து இளைஞர்கள் கொலை தொடர்பான வழக்கிலிருந்து முன்னாள் பிரதமர் நவாஸ் ஷெரீப்பின் சகோதரர் ஷாபாஷ் விடுதலை செய்யப்பட்டுள்ளார்.
பயங்கரவாத எதிர்ப்பு வழக்குகளை விசாரணை செய்யும் லாகூர் நீதிமன்றம் இந்தத் தீர்ப்பினை வழங்கியுள்ளது.
லாகூரின் முதல்வராக இருந்தபோது 5 மாணவர்களைக் கொல்ல பொலிஸாருக்கு உத்தரவிட்டதாக நவாஸ் ஷெரீப் மீது குற்றம் சாட்டப்பட்டது.
1998 ஏப்ரலில் இந்தச் சம்பவம் நடந்தன. இராணுவப் புரட்சி மூலம் முஷாரப் ஆட்சியைப் பிடித்த பின் 2001 ஷாபாஸ் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டது.
இறந்த ஒரு மாணவனின் தந்தை சயீதுதீன் கொடுத்த புகாரின் அடிப்படையில் ஷாபாஸ் உட்பட 13 பேர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டது.
இந்நிலையில் நவாஸ் ஷெரீப்பை இவ்வழக்கில் இருந்து விடுதலை செய்வதில் தனக்கு ஆட்சேபனை இல்லை என்று சயீதுதீன் நீதிமன்றத்தில் தெரிவித்தார்.
மாணவர்கள் கொலையில் தனக்குத் தொடர்பு இல்லை என்று ஷாபாஸ் விளக்கியிருப்பதாகவும் அவர் கூறினார். இதையடுத்து நவாஸ் ஷெரீபை விடுதலை செய்து நீதிபதி தீர்ப்புக் கூறினார்.
இந்த வழக்கு நிலுவையில் இருந்ததால் கடந்த மாதம் நடந்த தேர்தலில் அவர் போட்டியிடவில்லை. தற்போது வழக்கிலிருந்து விடுதலை செய்யப்பட்டிருப்பதால் அவர் இடைத் தேர்தலில் போட்டியிட வாய்ப்பு ஏற்பட்டுள்ளது.