அமெரிக்காவின் மிகப்பெரிய கணினி மென்பொருள் நிறுவனமான மைக்ரோசொப்ட் மீது ஐரோப்பிய ஆணையம் 1.3 பில்லியன் அமெரிக்க டொலர்கள் அபராதம் விதித்துள்ளது.
நான்கு வருடங்களுக்கு முன்னர் ஆணையம் விதித்த நிபந்தனைகளுக்கு பணிந்து நடக்க மைக்ரோசொப்ட் தவறியதால் இந்த அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.
இந்த நிறுவனம் தயாரிக்கும் விண்டோஸ் மென்பொருளுடன் சேர்ந்து இயங்கக்கூடிய இதர மென்பொருட்களை ஐரோப்பிய நிறுவனங்களுக்கு வழங்க இந்த நிறுவனம் அதிக பணம் கேட்டது என்று அப்போது ஆணையம் 613 மில்லியன் அபராதத்தை விதித்தது.
இந்த தீர்ப்புக்கு அமைய மைக்ரோசொப்ட் நடக்கவில்லை என்று கூறி இந்த புதிய அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.ஐரோப்பிய ஆணையம் விதித்த அபராதங்களிலேயே இதுதான் மிகப்பெரிய தொகையாகும்.