போர்க்களத்தில் போர்புரியும் இராணுவ வீரர்களுக்குப் பதிலாக ரோபோக்களை பயன்படுத்துவதற்கு விஞ்ஞானிகள் முயன்று வருகின்றனர்.
இதுகுறித்து கருத்துத் தெரிவித்த பிரிட்டனின் ஷெபீல்ட் பல்கலைக்கழகத்தின் பேராசிரியர் றோயஸ் ஷர்க்கி;
ரோபோ ஆயுதப் பந்தயம் விரைவில் நடைமுறைக்கு வரும். இதற்கான ஆராய்ச்சியில் அமெரிக்கா, ரஷ்யா, சீனா மற்றும் இஸ்ரேல் ஆகிய நாடுகள் ஈடுபட்டுள்ளன.
எப்போது தாக்குதல் நடத்துவது என்பதை சுயமாக முடிவு செய்யும் திறன் படைத்த ரோபோக்களை உருவாக்கும் முயற்சியில் இந்த நாடுகள் தீவிரம் காட்டி வருகின்றன. எப்போது தாக்குதல் நடத்துவது, யார் தாக்குவது போன்ற முடிவுகளை எடுக்கக்கூடிய ரோபோக்களை உருவாக்கும் முயற்சியில் இந்த நாடுகள் இறங்கியுள்ளன.
இன்னும் 10 ஆண்டுகளில் இவ்வாறான ரோபோக்கள் நடைமுறைக்கு வரும். தீவிரவாத இயக்கங்கள் தற்போது தற்கொலைக் குண்டுதாரிகளை பயன்படுத்தி வருகின்றன. விரைவில் ரோபோக்கள் அந்த இடத்தைப் பிடிக்கப் போகின்றன எனத் தெரிவித்துள்ளார்.