ஆப்கானிஸ்தானில் தலிபான்களுக்கு எதிரான போரில் ஈடுபட்டிருந்த பிரிட்டிஷ் இளவரசர் ஹரி பிரிட்டன் திரும்பியுள்ளார்.
பிரிட்டிஷ் இளவரசர் சார்ள்சின் இளைய மகனான ஹரி இராணுவத்தில் பயிற்சி பெற்று ஆப்கானிஸ்தானில் போரில் ஈடுபட அனுப்பப்பட்டார்.
ஆப்கானிலுள்ள பிரிட்டன் படைகளுடன் இணைந்து ஹரி கடந்த 10 வாரங்களாக இரகசியமாக போரில் ஈடுபட்டு வந்தார்.
பிரிட்டன் படைகளுடன் ஹரி போர்க்களத்தில் ஆப்கான் படைகளுக்கு எதிராக போரிடுவது தொடர்பாக பத்திரிகைகள் செய்தி வெளியிட்டன.
இதனால், ஹரியின் உயிருக்கு ஆபத்து ஏற்படுமெனக் கருதி அவரைத் திரும்ப பிரிட்டனுக்கு அழைக்க இராணுவ அமைச்சகம் முடிவு செய்தது.
அதனைத் தொடர்ந்து 70 இராணுவ துருப்புகளுடன் ஒக்ஸ்போட் ஹையர் இராணுவத் தளத்தில் வந்திறங்கிய இளவரசர் ஹரியை தந்தை சார்ள்ஸ் சகோதரர் வில்லியம் ஆகியோர் வரவேற்றனர்.
ஆனால் ,இவ்விடயம் குறித்து கருத்துத் தெரிவித்த ஹரி மீண்டும் தான் போர்முனைக்குச் செல்வதற்கு ஆர்வமாக இருப்பதாகத் தெரிவித்தார்.