மகா சிவராத்திரி தினத்தின் மறுநாள் திருகோணேஸ்வராலயத்தில் எழுந்தருளியிருக்கும் மாதுமை அம்மாள் சமேத திருக்கோணேஸ்வரப் பெருமானின் திருகோணமலை நகர்வலம் மார்ச் 7 ஆம் திகதி வெள்ளிக்கிழமை இடம்பெறும் என்று ஆலய அறங்காவல் சபை அறிவித்துள்ளது.
மாதுமை அம்மாள் சமேத திருக்கோணேஸ்வரப் பெருமான், சோமாஸ்கந்த மூர்த்தியாக நகர்வலம் வந்து அருள்பாலிப்பார் என்றும் நகர்வலம் வரும் வீதிகளில் அடியார்கள் இல்லம் தோறும் மகரதோரணம் அமைத்து பூரண கும்பம் வைத்து வழிபடுமாறும் கோரப்பட்டுள்ளது.
நகர்வலம் வெள்ளிக்கிழமை காலை 8 மணிக்கு ஆரம்பமாகும். கோணேஸர், ஆலயத்திலிருந்து புறப்படுவார். நகர்வலம் கோட்டை வாசலிலிருந்து ஏகாம்பரம் வீதி, வீரநகர் வழியாக திருக்கடலூர் பத்திரகாளி அம்பாள் ஆலயம் சென்று, மீண்டும் ஏகாம்பரம் வீதி, புகையிரத நிலைய வீதி, விகாரை வீதி, உவர்மலை சந்தி, உவர்மலை மத்திய வீதி, பிள்ளையார் கோவில், உவர்மலை துர்க்கையம்மன் ஆலயம், மக்கெய்சர் வீதி, ஸ்பெல்ட்வின் வீதி, தேன் தமிழ் வீதி, மடத்தடிச் சந்தி, மத்திய வீதி, பிரதான வீதி, திருஞானசம்பந்தர் வீதி, சிவன்கோவில், முத்துக்குமார சுவாமி கோயில் வீதி, ராஜவரோதயம் வீதி, வித்தியாலயம் வீதி, பத்திரகாளி அம்பாள் ஆலயம், ஆலடி விநாயகர் ஆலயம், கல்லூரி வீதி, கிறீன் வீதி, சுங்க வீதி, வில்லூன்றி கந்தசாமி கோயில் வீதி, மனையாவெளி விநாயகர் ஆலயம், கடற்படைத்தளவீதி ஆகிய வழியாக கோணேஸப் பெருமான் நகர்வலம் கோணேஸ்வராலயத்தைச் சென்றடையும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.