Thinakkural Tamil News Paper - The Independent Voice in Tamil

The Independent Voice in Tamil
Tuesday, March 04, 2008


Download latha tamil font
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
  Sri Lanka Forecast
 
 
 
 
 
 
 
HOT NEWS
Important News
1 இலட்சத்துக்கும் அதிகமான ஆசிரியர்கள் இன்று முதல் சுகவீன விடுமுறை போராட்டம்
[04 - March - 2008] [Font Size - A - A - A]
* ஜனாதிபதியுடனான பேச்சுவார்த்தை தோல்வியின் எதிரொலி

எம்.ஏ.எம்.நிலாம்

ஆசிரியர்களின் சம்பள முரண்பாட்டைத் தீர்ப்பதற்கு அரசாங்கம் உரிய நடவடிக்கைகளை எடுக்கத் தவறியுள்ளதையிட்டு தமது அதிருப்தியை வெளிக்காட்டும் விதத்தில் மூன்று பிரதான ஆசிரியர் சங்கங்களின் ஒரு இலட்சத்துக்கும் அதிகமான ஆசிரியர்கள் இன்று செவ்வாய்க்கிழமை முதல் சுகவீன லீவுப் போராட்டத்தை ஆரம்பிக்க முடிவு செய்துள்ளனர்.

கடந்த 29 ஆம் திகதி வெள்ளிக்கிழமை ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷவுடன் நடத்திய பேச்சுவார்த்தையின் போது சாதகமான முடிவெதுவும் கிட்டாததையடுத்தே இன்று முதல் சுகவீன லீவுப் போராட்டத்தை ஆரம்பிக்கும் முடிவை எடுத்ததாக அகில இலங்கை ஐக்கிய ஆசிரியர் சங்கத் தலைவர் யல்வெல பஞ்ஞாசேக்கர தேரோ தெரிவித்தார்.

நேற்று திங்கட்கிழமை அகில இலங்கை ஐக்கிய ஆசிரியர் சங்கம், இலங்கை ஆசிரியர் சேவைச்சங்கம், கல்வி ஊழியர் சங்கம் என்பன கொழும்பில் நடத்திய விஷேட ஊடகவியலாளர் மாநாட்டின் போது இந்த முடிவு அறிவிக்கப்பட்டது.

நாட்டில் சுமார் 10 ஆயிரம் பாடசாலைகள் இருப்பதாகவும் இவற்றில் இரண்டு இலட்சம் ஆசிரியர்கள் பணி புரிவதாகவும் தெரிவித்த பஞ்ஞாசேகர தேரோ பெரும் எண்ணிக்கையான உறுப்பினர்கள் இந்த மூன்று சங்கங்களிலேயே அங்கத்துவம் வகிப்பதாகவும் சுட்டிக்காட்டினார்.

ஆசிரியர்களின் சம்பள முரண்பாட்டைத் தீர்க்குமாறு நீண்டகாலமாக அரசுக்கு கோரிக்கை விடுத்து வந்ததாகத் தெரிவித்த தேரோ கல்வி அமைச்சு அதிகாரிகளும் அரசும் காலம் கடத்தும் போக்கையே தொடர்ந்து கடைப்பிடித்து வந்ததாகவும் கூறினார்.

இறுதியாக நாம் கடந்த வெள்ளிக்கிழமை ஜனாதிபதியை சந்தித்து நீண்ட நேரம் கலந்துரையாடிய போதிலும் ஜனாதிபதியிடமிருந்து எமக்கு சாதகமான பதிலெதுவும் கிடைக்காததன் காரணமாகவே ஆரம்ப கட்ட தொழிற்சங்க நடவடிக்கையாக சுகவீன லீவுப் போராட்டத்தை ஆரம்பிக்கத் தீர்மானித்ததாக தெரிவித்தார்.

ஆசிரியர்களின் உரிமைகளை வென்றெடுக்கும் இந்தப் போராட்டத்துக்கு சகல ஆசிரியர் சங்கங்களதும் கல்விசார் தொழிற்சங்கங்களினதும் ஒத்துழைப்பை எதிர்பார்ப்பதாகவும் அவர் கோரிக்கை விடுத்தார்.

இன்று முதல் ஒரு இலட்சத்துக்கும் கூடுதலான ஆசிரியர்கள் சுகவீன லீவு போராட்டத்தில் ஈடுபடுவதாகவும் அத்துடன் எதிர்வரும் ஆகஸ்ட் மாதத்தில் நடைபெறவிருக்கும் கல்விப் பொதுத்தராதர உயர்தரப் பரீட்சையின் போது விடைத்தாள் பரிசீலிப்பதற்காக விண்ணப்பங்களை அனுப்புவதில்லை எனவும் தீர்மானிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில் இன்று ஆசிரியர்கள் சுகவீன லீவுப் போராட்டத்தை ஆரம்பிப்பார்களானால் பெரும்பான்மையான பாடசாலைகள் இயங்க முடியாத நெருக்கடி நிலை உருவாகலாமென தெரிவிக்கப்படுகின்றது. இதனால் கூடுதலாக உயர்தரப் பாடசாலைகளின் செயற்பாடுகள் பாதிக்கப்படலாமென்று அச்சம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, மேற்படி மூன்று ஆசிரியர் சங்கங்களும் மேற்கொள்ளத் தீர்மானிக்கப்பட்டிருக்கும் சுகவீன லீவு தொழிற்சங்க நடவடிக்கைகளில் தமது சங்கங்கள் பங்கேற்கப் போவதில்லை என 10 ஆசிரியர் சங்கங்கள் அறிவித்துள்ளன.

இலங்கை ஆசிரியர் சங்கமும் சுயாதீன ஆசிரியர் சங்கமும் அகில இலங்கை அதிபர்கள் சங்கமும் இலங்கை தமிழர் ஆசிரியர் சங்கமும் அகில இலங்கை இஸ்லாமிய ஆசிரியர் சங்கமும் இலங்கை தேசிய ஆசிரியர் சங்கமும் விவசாய, விஞ்ஞான டிப்ளோமா பட்டதாரி ஆசிரிய சங்கமும் சுயாதீன கல்விச் சேவையாளர் சங்கமும் ஆசிரிய ஊழியர் சங்கம் என்பன கூட்டாக இந்த முடிவை எடுத்திருப்பதாக அதன் இணைப்பாளரான ஜோசப் ஸ்ராலின் தெரிவித்தார்.

சம்பள முரண்பாட்டைத் தீர்க்க அரசு நடவடிக்கை எடுக்கத் தவறியதை கண்டித்திருக்கும் இக் கூட்டு ஆசிரியர் சங்க அமைப்புகள் தாங்கள் எடுக்கவிருக்கும் நடவடிக்கைகள் குறித்து அடுத்தவாரம் முடிவெடுக்கப்படுமெனவும் அதற்கு முன்னர் கூடி ஆராயப்படவிருப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

இதேவேளை, கல்வி அமைச்சு விடுத்திருக்கும் அறிக்கையில் நாட்டில் 32 ஆசிரியர் சங்கங்கள் காணப்படுவதாகவும் அதில் மூன்று சங்கங்கள் மட்டுமே தொழிற்சங்க நடவடிக்கையில் இறங்கத் தீர்மானித்திருப்பதாகவும் சுட்டிக்காட்டியுள்ளது.

இத் தொழிற்சங்க நடவடிக்கைகளால் பாடசாலைகளில் கல்வி நடவடிக்கைகள் பாதிக்கப்படுவதை தவிர்ப்பதற்காக அவசர நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு பிராந்திய மாவட்டக் கல்வித் திணைக்களங்களுக்கும் கல்வி அதிகாரிகளுக்கும் அறிவுறுத்தல் வழங்கப்பட்டிருப்பதாகவும் கல்வி அமைச்சு தெரிவித்தது.

Email this page Your Opinion Print this page
லவ் காஸின் விலையும் ரூ.261 ஆல் அதிகரிப்பு
இந்திய பாதுகாப்பு அமைச்சரையும் முப்படைத் தளபதிகளையும் இலங்கை இராணுவத் தளபதி இன்று சந்தித்துப் பேசுவார்
ரஷ்யாவின் புதிய ஜனாதிபதி இந்திய வம்சாவளியை சேர்ந்தவரா?
செட்டிகுளத்தில் இளைஞன் சுட்டுக்கொலை
வாதுவ சென்ற ரயிலில் குண்டுப்புரளி பீதியில் குதித்து ஓடிய பயணிகள்
ஊழியர் சேமலாப நிதியத்தின் மீள் பதிவுப் பணிகள் ஆரம்பம்
மலேசியாவுக்கு படகில் செல்ல முயற்சித்து கடலில் இருவாரங்களாக தத்தளித்த 71 பேர் கிழக்கில்
இலங்கை இனப்பிரச்சினைக்கு இராணுவத் தீர்வு முடிவாக அமையாதென்பதில் இந்தியா உறுதி
`பிரபாகரனை' வெளியிடுவதற்கு தணிக்கை சபை அனுமதித்தது
தொலைபேசி மூலம் மிரட்டி கப்பம் கோரி வந்த கடற்படை வீரர் உட்பட மூவர் ரத்கமவில் கைது
மலையக மக்களின் வாழ்க்கை முறையை மாற்றியமைக்கவே நவீன கிராம மாதிரி வீடமைப்புத் திட்டம் அங்குரார்ப்பணம்
மின்சாரக் கட்டணம் தொடர்பாக மக்கள் மீது வீண்சுமை ஏற்றப்படாது
தமிழ் மக்களின் ஒற்றுமையை வெளிப்படுத்தும் களமாக உள்ளூராட்சி சபைத் தேர்தலை எதிர் கொண்டுள்ளோம்
மகா சிவராத்திரி தினத்தில் ஒலிபெருக்கி பாவனை
புசல்லாவை பெரட்டாசி தோட்ட வாகன விபத்தில் நால்வர் படுகாயம்
நாவலப்பிட்டி ரயில் நிலைய பகுதிகளில் பாதுகாப்பு அதிகரிப்பு
உள்ளூராட்சி சபை தேர்தலில் அரச சின்னத்திற்கு வாக்களித்தால் மட்டுமே கிழக்கில் அமைதி தொடரும்
மட்டக்களப்பின் சகல உள்ளூராட்சி சபைகளையும் ஆயுதக் குழு உதவியுடன் கைப்பற்ற அரசு முயற்சி
கடற்படை பஸ்- லொறி விபத்தில் ஒருவர் பலி, இருவர் படுகாயம்
வைத்தியர்களின் அலட்சியப் போக்கினால் பாம்புக்கடிக்கிலக்கான சிறுமி மரணம்
சுவீடன் நாட்டு பிரஜை விமான நிலையத்தில் கைது
கணவனின் தீராத நோயினால் மனமுடைந்த இளம் பெண் தனக்குதானே தீ மூட்டி தற்கொலை
உலக சந்தையில் காஸ் விலை குறையும் போது இங்கும் அதன் விலை குறைக்கப்பட வேண்டும்
இளம் பராயத்தவரை புனர்வாழ்வு முகாமில் தடுத்துவைக்க உத்தரவிடுவது சட்டவிரோதம்
எல்லாவல மேதானந்த தேரரின் குற்றச்சாட்டை ஆட்சேபித்து மட்டக்களப்பு ஷ்ரீமங்கள ராமய விகாராதிபதி உண்ணாவிரதம்
எல்லாவல மேதானந்த தேரரின் குற்றச்சாட்டை ஆட்சேபித்து மட்டக்களப்பு ஷ்ரீமங்கள ராமய விகாராதிபதி உண்ணாவிரதம்
கொள்ளையர்களினால் கடத்திச் செல்லப்பட்ட சமாதான நீதிவானை விடுவிக்க கோரிக்கை
நாட்டை ஒன்றிணைக்கும் ஜனாதிபதியின் நடவடிக்கைக்கு ஆதரவு தெரிவிக்கவே அவருடன் இணைந்தோம்
மட்டக்களப்பில் சர்வதேச மகளிர் தினத்தை கொண்டாட ஏற்பாடு
பஸ்ஸிலிருந்து கீழேவீழ்ந்த தாயும் குழந்தையும் ஆபத்தான நிலையில் வைத்தியசாலையில் அனுமதி
1 இலட்சத்துக்கும் அதிகமான ஆசிரியர்கள் இன்று முதல் சுகவீன விடுமுறை போராட்டம்
மகா சிவராத்திரி தினத்தின் மறுநாள் திருக்கோணேஸ்வரப் பெருமாள் வீதியுலா
வீதி, பாலம் நீண்டகாலமாக புனரமைப்பு செய்யப்படாததால் மக்கள் பெரும் அவதி
 
 
 
   
 
 
   
Home - Important News - Foreign News - Sports News - Sinhala News - Articles - Editorial - DR - Cartoon - Archives - Obituaries
© 2008. All Rights Reserved. Thinakkural.com / Thinakural.com - Site By Evosof.com