Thinakkural Tamil News Paper - The Independent Voice in Tamil

The Independent Voice in Tamil
Tuesday, March 04, 2008


Download latha tamil font
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
  Sri Lanka Forecast
 
 
 
 
 
 
 
HOT NEWS
Important News
எல்லாவல மேதானந்த தேரரின் குற்றச்சாட்டை ஆட்சேபித்து மட்டக்களப்பு ஷ்ரீமங்கள ராமய விகாராதிபதி உண்ணாவிரதம்
[04 - March - 2008] [Font Size - A - A - A]
மட்டக்களப்பு ஷ்ரீமங்கள ராமய விகாராதிபதி அம்பப்பிட்டிய சுமணரத்தின தேரர் நேற்று திங்கட்கிழமை முதல் சாகும் வரை உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளார்.

எல்லாவலமேதானந்த தேரர் தன்னை விடுதலைப் புலிகளின் ஆதரவாளர் என்று கூறி மட்டக்களப்பு பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்தமை மற்றும் அது தொடர்பான பிரசாரங்களை மேற்கொண்டுவருவதையும் ஆட்சேபித்தே அவர் இந்த உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளார்.

நேற்றுக் காலை 6.30 மணி முதல் மட்டக்களப்பு பொலிஸ் நிலையத்திற்கு அருகாமையில் வீதியில் அமைக்கப்பட்ட மேடையில் அமர்ந்து சாகும் வரை உண்ணாவிரதத்தை அம்பிப்பிட்டிய சுமணரத்தின தேரர் ஆரம்பித்துள்ளார்.

எல்லாவலமேதானந்த தேரர் தனக்கு எதிராக சுமத்திய குற்றச்சாட்டுக்களை வாபஸ்பெறக் கோரியும் கண்டித்தும் அறிக்கையினை வெளியிட்டுள்ளதுடன் உண்ணாவிரதம் மேற்கொள்ளும் இடத்தை சுற்றி தமிழ், சிங்கள மொழியில் எழுதப்பட்டுள்ள பதாதைகளையும் வைத்துள்ளார்.

அப்பதாதைகளில் குறிப்பிட்டுள்ளதாவது; எல்லாவல மேதானந்த தேரர் என்பவர் என்னைப் பயங்கரவாதி என குற்றஞ்சாட்டியதை நிரூபிக்கும் வரை உண்ணாவிரதம், எல்லாவல மேதானந்த தேரர் இனப்பிரச்சினையை தூண்டுவதை எதிர்த்து போராடுவோம், இனப் பிரச்சினைக்கு தீர்வு காணும் வரை உண்ணாவிரதப் போராட்டம் தொடரும், எல்லாவெல மேதனந்த தேரர் பௌத்த மதத்தை அவமதிக்கின்றார், எல்லாவெல மோதானந்த தேரர் என்னை பயங்கரவாதி என நிரூபிக்கும் வரை உண்ணாவிரதம் தொடரும்.

இதேவேளை, அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது; தன்னை அரசியலில் பாவிக்க சிலர் முயற்சித்தபோது அதற்கு தான் இடம்கொடுக்க மறுத்தபோது தனது நற்பெயருக்கு களங்கம் ஏற்படுத்தும் நோக்குடன் பல குற்றச்சாட்டுகளை சுமத்தி வருகின்றனர்.

எல்லாவல மேதானந்த தேரர் நான் புலிகள் இயக்கத்துடன் தொடர்புடையவன் என்று மட்டக்களப்பு பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளார்.

அதுமட்டுமன்றி ரி.என்.எல். தொலைக்காட்சி மற்றும் பொதுஜன ஊடகங்கள் வாயிலாகவும் மக்கள் மனதில் திணிப்பதற்கு முயற்சி எடுக்கப்பட்டுள்ளது. இதனால் பாதுகாப்பற்ற நிலைக்கு தள்ளப்பட்டுள்ளேன்.

இதேவேளை, எனது அழைப்பின் பெயரில் வரும் மதகுருமாருக்கும் பலத்த சோதனை மேற்கொள்ளப்பட்டு வருகின்றது.

எல்லாவெல மேதானந்த தேரர் மட்டக்களப்பில் பௌத்தர்கள் இல்லையென்றும் மட்டக்களப்பு விகாரைக்கு ஒதுக்கப்படும் நிதியினை தடுப்பதாகவும் குறிப்பிட்டே உண்ணாவிரதப் போராட்டத்தில் இறங்கியுள்ளார்.

தான் புலி ஆதரவாளர் என வெளியிட்ட அறிக்கையினை வாபஸ் பெற வேண்டும். மட்டக்களப்பு பொலிஸ் நிலையத்தில் முறைப்பாட்டின் படி நான் புலி ஆதரவாளரா இல்லையா என்பதை பாதுகாப்புத் தரப்பில் பொறுப்பு வாய்ந்த அதிகாரி ஒருவர் வெளியிட வேண்டும். மட்டக்களப்பு விகாரைக்கு ஒதுக்கப்படும் நிதியை வழங்க வேண்டும். பௌத்தர் இல்லாத இடத்தில் விகாரை அபிவிருத்தி செய்ய தேவை இல்லை என வெளியிட்ட கூற்றை வாபஸ்பெற வேண்டும் எனும் கோரிக்கைகளை முன்வைத்துள்ளார்.

இதேவேளை, தேரர் உண்ணாவிரதம் இருந்த மேடையினை மறைத்து இடைஞ்சலாக பொலிஸார் பஸ் வண்டியினை நிறுத்தியதை ஆட்சேபித்து ஆத்திரமடைந்த தேரர் உடனடியாக பஸ்ஸை எடுக்காவிட்டால் தீவைக்கப்போவதாக கூறி தீப்பெட்டியுடன் தயாரான போதும் இதனை கிறிஸ்தவ மதகுருமார் தடுத்து சமாதானப்படுத்தினர்.

பொலிஸாரிடம் ஆயுதம் உள்ளது. என்னை சுடலாமே, ஏன் இப்படி இடையூறு விளைவிக்கின்றார்கள் என்று தேரர் கோஷமிட்டதையடுத்து அவருக்கு ஆதரவாக பெருந்திரளான பொதுமக்கள் அப்பகுதியில் கூடி நின்றதையும் காணக்கூடியதாகவிருந்தது.

Email this page Your Opinion Print this page
லவ் காஸின் விலையும் ரூ.261 ஆல் அதிகரிப்பு
இந்திய பாதுகாப்பு அமைச்சரையும் முப்படைத் தளபதிகளையும் இலங்கை இராணுவத் தளபதி இன்று சந்தித்துப் பேசுவார்
ரஷ்யாவின் புதிய ஜனாதிபதி இந்திய வம்சாவளியை சேர்ந்தவரா?
செட்டிகுளத்தில் இளைஞன் சுட்டுக்கொலை
வாதுவ சென்ற ரயிலில் குண்டுப்புரளி பீதியில் குதித்து ஓடிய பயணிகள்
ஊழியர் சேமலாப நிதியத்தின் மீள் பதிவுப் பணிகள் ஆரம்பம்
மலேசியாவுக்கு படகில் செல்ல முயற்சித்து கடலில் இருவாரங்களாக தத்தளித்த 71 பேர் கிழக்கில்
இலங்கை இனப்பிரச்சினைக்கு இராணுவத் தீர்வு முடிவாக அமையாதென்பதில் இந்தியா உறுதி
`பிரபாகரனை' வெளியிடுவதற்கு தணிக்கை சபை அனுமதித்தது
தொலைபேசி மூலம் மிரட்டி கப்பம் கோரி வந்த கடற்படை வீரர் உட்பட மூவர் ரத்கமவில் கைது
மலையக மக்களின் வாழ்க்கை முறையை மாற்றியமைக்கவே நவீன கிராம மாதிரி வீடமைப்புத் திட்டம் அங்குரார்ப்பணம்
மின்சாரக் கட்டணம் தொடர்பாக மக்கள் மீது வீண்சுமை ஏற்றப்படாது
தமிழ் மக்களின் ஒற்றுமையை வெளிப்படுத்தும் களமாக உள்ளூராட்சி சபைத் தேர்தலை எதிர் கொண்டுள்ளோம்
மகா சிவராத்திரி தினத்தில் ஒலிபெருக்கி பாவனை
புசல்லாவை பெரட்டாசி தோட்ட வாகன விபத்தில் நால்வர் படுகாயம்
நாவலப்பிட்டி ரயில் நிலைய பகுதிகளில் பாதுகாப்பு அதிகரிப்பு
உள்ளூராட்சி சபை தேர்தலில் அரச சின்னத்திற்கு வாக்களித்தால் மட்டுமே கிழக்கில் அமைதி தொடரும்
மட்டக்களப்பின் சகல உள்ளூராட்சி சபைகளையும் ஆயுதக் குழு உதவியுடன் கைப்பற்ற அரசு முயற்சி
கடற்படை பஸ்- லொறி விபத்தில் ஒருவர் பலி, இருவர் படுகாயம்
வைத்தியர்களின் அலட்சியப் போக்கினால் பாம்புக்கடிக்கிலக்கான சிறுமி மரணம்
சுவீடன் நாட்டு பிரஜை விமான நிலையத்தில் கைது
கணவனின் தீராத நோயினால் மனமுடைந்த இளம் பெண் தனக்குதானே தீ மூட்டி தற்கொலை
உலக சந்தையில் காஸ் விலை குறையும் போது இங்கும் அதன் விலை குறைக்கப்பட வேண்டும்
இளம் பராயத்தவரை புனர்வாழ்வு முகாமில் தடுத்துவைக்க உத்தரவிடுவது சட்டவிரோதம்
எல்லாவல மேதானந்த தேரரின் குற்றச்சாட்டை ஆட்சேபித்து மட்டக்களப்பு ஷ்ரீமங்கள ராமய விகாராதிபதி உண்ணாவிரதம்
எல்லாவல மேதானந்த தேரரின் குற்றச்சாட்டை ஆட்சேபித்து மட்டக்களப்பு ஷ்ரீமங்கள ராமய விகாராதிபதி உண்ணாவிரதம்
கொள்ளையர்களினால் கடத்திச் செல்லப்பட்ட சமாதான நீதிவானை விடுவிக்க கோரிக்கை
நாட்டை ஒன்றிணைக்கும் ஜனாதிபதியின் நடவடிக்கைக்கு ஆதரவு தெரிவிக்கவே அவருடன் இணைந்தோம்
மட்டக்களப்பில் சர்வதேச மகளிர் தினத்தை கொண்டாட ஏற்பாடு
பஸ்ஸிலிருந்து கீழேவீழ்ந்த தாயும் குழந்தையும் ஆபத்தான நிலையில் வைத்தியசாலையில் அனுமதி
1 இலட்சத்துக்கும் அதிகமான ஆசிரியர்கள் இன்று முதல் சுகவீன விடுமுறை போராட்டம்
மகா சிவராத்திரி தினத்தின் மறுநாள் திருக்கோணேஸ்வரப் பெருமாள் வீதியுலா
வீதி, பாலம் நீண்டகாலமாக புனரமைப்பு செய்யப்படாததால் மக்கள் பெரும் அவதி
 
 
 
   
 
 
   
Home - Important News - Foreign News - Sports News - Sinhala News - Articles - Editorial - DR - Cartoon - Archives - Obituaries
© 2008. All Rights Reserved. Thinakkural.com / Thinakural.com - Site By Evosof.com