|
சுவீடன் நாட்டு பிரஜையொருவர் பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் வைத்து நேற்று திங்கட்கிழமை கைது செய்யப்பட்டிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
விமான நிலையத்தின் சுங்கப்பிரிவு அதிகாரிகளினாலேயே இவர் கைது செய்யப்பட்டுள்ளார். ஆயுதங்கள் தொடர்பான விபரப் பட்டியல்கள் சிலவற்றை எடுத்து வர முயற்சித்தாரென்றே இந்த சுவீடன் பிரஜை கைது செய்யப்பட்டிருப்பதாகவும் கூறப்பட்டது. |