டிட்டோகுகன்
திருகோணமலை, ஹபரண வீதியில் நேற்று திங்கட்கிழமை கடற்படையினரின் பஸ்ஸொன்றும் லொறியொன்றும் நேருக்கு நேர் மோதியதில் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன் மேலும் இருவர் படுகாயமடைந்துள்ளனர்.
பிற்பகல் 12.45 மணியளவிலேயே இந்தச் சம்பவம் இடம்பெற்றதாக ஹபரண பொலிஸார் தெரிவித்தனர்.
விடுமுறையில் வீடு திரும்பிக் கொண்டிருந்த கடற்படையினர் பயணித்த பஸ்ஸொன்றும் எதிரே வந்த லொறியொன்றுமே நேருக்கு நேர் மோதிக் கொண்டுள்ளன. இச்சம்பவத்தில் லொறி சாரதியே உயிரிழந்துள்ளதுடன் படுகாயமடைந்த இருவரும் லொறியில் பயணித்தவர்களே என்றும் பொலிஸார் கூறினர்.
காயமடைந்தவர்கள் சிகிச்சைக்காக அநுராதபுரம் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருப்பதாகவும் பொலிஸார் மேலும் கூறினர்.