Thinakkural Tamil News Paper - The Independent Voice in Tamil

The Independent Voice in Tamil
Tuesday, March 04, 2008


Download latha tamil font
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
  Sri Lanka Forecast
 
 
 
 
 
 
 
HOT NEWS
Important News
தமிழ் மக்களின் ஒற்றுமையை வெளிப்படுத்தும் களமாக உள்ளூராட்சி சபைத் தேர்தலை எதிர் கொண்டுள்ளோம்
[04 - March - 2008] [Font Size - A - A - A]
* புளொட் தலைவர் சித்தார்த்தன்

வடக்கு, கிழக்கு தமிழ் மக்களின் ஒற்றுமையையும் உணர்வுகளையும் வெளிப்படுத்தும் ஒரு களமாகவே இந்த உள்ளூராட்சிச் சபைத் தேர்தலை எதிர் கொண்டுள்ளோம் என்று தமழீழ மக்கள் விடுதலை கழக (புளொட்)த்தின் தலைவர் தர்மலிங்கம் சித்தார்த்தன் தெரிவித்துள்ளார்.

இம்மாதம் 10 ஆம் திகதி நடைபெறப் போகும் உள்ளூராட்சி சபைகளுக்கான தேர்தல் தொடர்பாக மட்டக்களப்பு நகரிலுள்ள புளொட் அலுவலகத்தில் நேற்று முன்தினம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் கலந்து கொண்ட தர்மலிங்கம் சித்தார்த்தன் மேலும் தெரிவிக்கையில் கூறியதாவது;

" இதுவரை சிறுசிறு தேர்தல் வன்முறைகளே இடம்பெற்றுள்ளது. இத்தேர்தல் தெற்கில் இடம்பெற்று இருக்குமாயின் பாரிய வன்முறைகள் இடம்பெற்றிருக்கும்.

தேர்தல் தினத்தன்று அரசு எவ்வாறு நடந்து கொள்ளும் என்பதே எமது கேள்வி. தான் விரும்பும் பெறுபேற்றை அடைய முயற்சிக்குமா அல்லது அனைவருக்கும் ஏற்றுக் கொள்ளக் கூடிய சுதந்திரமான நியாயமான நீதியான தேர்தலாக நடைபெற இடமளிக்குமா? என்பதே அனைவரதும் எதிர்பார்ப்பாக உள்ளது.

அரசு ஒன்பது உள்ளூராட்சி மன்றங்களையும் தாம் கூட்டுச் சேர்ந்த கட்சியுடன் இணைந்து கைப்பற்ற வேண்டும் என்பதில் இலக்காக உள்ளது. இத் தேர்தலை வைத்தே அரசு தனது அடுத்த நகர்வினை மேற்கொள்ள விருக்கின்றது.

நான் மட்டக்களப்பிற்கு வந்து இதுவரை பொலிஸ் அதிகாரிகள் விஷேட அதிரடிப்படை அதிகாரிகளை சந்தித்து நியாயமான தேர்தலை நடத்த உதவுமாறு கோரியுள்ளேன். அவர்களும் அதனையே விரும்புகின்றனர்" என்றார்.

இத் தேர்தலில் தங்களது கட்சி எந்த இலக்கை அடையும் என எதிர்பார்க்கின்றீர்கள் என கேட்ட கேள்விக்கு பதிலளிக்கையில், புளொட், ஈ.பி.டி.பி., ஈ.பி.ஆர்.எல்.எப். (பத்பநாபா) ஆகிய மூன்று கட்சிகளும் இணைந்து சுயேட்சையாக போட்டியிடுகின்றோம். 9 உள்ளூராட்சி சபைகளையும் வென்று விடுவோம் என்று கூற முடியாது. இருந்தாலும் பல இடங்களை கைப்பற்றுவோம்.

மக்களிடம் கூறி வருகின்றோம். இது வெறுமனே பிரதேச சபைத் தேர்தல் அல்ல வடக்கு, கிழக்கு மக்களது தலைவிதியை தீர்மானிக்கின்ற தேர்தலாகவேயுள்ளது.

அரசு 9 சபைகளையும் வெல்ல வேண்டும் என்பதில் இலக்காக உள்ளது. ஜனாதிபதி இத் தேர்தலை வைத்தே மீதி நகர்வை நகர்த்த இருக்கின்றார்.

அரசு எதிர்வரும் மே மாதம் கிழக்கு மாகாண சபை தேர்தலை நடத்த இருக்கின்றது பிரதேச சபையில்

இணைத்துள்ள மூன்று கட்சிகள் மாத்திரமல்ல வேறு கட்சிகள் விரும்பினாலும் இணைத்துக் கொள்வோம்.

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்காக இணைந்து போட்டியிடுவதற்கு தமிழீழ மக்கள விடுதலைப் புலிகளுடன் ஆரம்பத்தில் பேச்சு நடாத்தினோம் ஆரம்பத்தில் விருப்பம் தெரிவித்த அவர்கள் பின்னர் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியுடன் இணைந்துகொண்டனர்.

மட்டக்களப்பில் தற்போது ஆயுத நடமாட்டம் தற்போது குறைந்துள்ளது ஆயுதநடமாட்டம் இருந்தால் நடவடிக்கை எடுப்பதாகவும் படை அதிகாரிகள் உத்தரவாதம் தந்துள்ளனர்.

தற்போது மக்கள் பரவலாக அச்சத்தில் உள்ளனர். மக்களது அச்சத்தை போக்கி அவர்களை வாக்களிக்க செய்ய மூன்று கட்சிகளும் என்ன நடவடிக்கை எடுத்துள்ளீர்கள் என்ற கேள்விக்கு பதிலளிக்கையில் அச்சத்துக்கு காரணம் ஆயுத நடமாட்டம். அதனை கட்டுப்படுத்த முடியுமான நடவடிக்கை எடுத்து வருகின்றோம்.

பிரேமதாசா காலம் முதல் இன்றுவரை இடைக்கால நிருவாகத்தை அமைக்க கோரியுள்ளோம். தமிழ் மக்களின் நியாயமான பிரச்சினைக்கு தீர்வு காணவே முயற்சிக்கிறோம் டக்ளஸ் தேவானந்தாவும் மிகத் தெளிவாக மத்தியில் கூட்டாச்சி வடக்கு கிழக்கில் சுயாட்சி என்பதை வலியுறுத்தி வருகின்றார். கொள்கை ரீதியில் தெளிவாகவேயுள்ளோம் என்று அவர் தெரிவித்துள்ளார்.

Email this page Your Opinion Print this page
லவ் காஸின் விலையும் ரூ.261 ஆல் அதிகரிப்பு
இந்திய பாதுகாப்பு அமைச்சரையும் முப்படைத் தளபதிகளையும் இலங்கை இராணுவத் தளபதி இன்று சந்தித்துப் பேசுவார்
ரஷ்யாவின் புதிய ஜனாதிபதி இந்திய வம்சாவளியை சேர்ந்தவரா?
செட்டிகுளத்தில் இளைஞன் சுட்டுக்கொலை
வாதுவ சென்ற ரயிலில் குண்டுப்புரளி பீதியில் குதித்து ஓடிய பயணிகள்
ஊழியர் சேமலாப நிதியத்தின் மீள் பதிவுப் பணிகள் ஆரம்பம்
மலேசியாவுக்கு படகில் செல்ல முயற்சித்து கடலில் இருவாரங்களாக தத்தளித்த 71 பேர் கிழக்கில்
இலங்கை இனப்பிரச்சினைக்கு இராணுவத் தீர்வு முடிவாக அமையாதென்பதில் இந்தியா உறுதி
`பிரபாகரனை' வெளியிடுவதற்கு தணிக்கை சபை அனுமதித்தது
தொலைபேசி மூலம் மிரட்டி கப்பம் கோரி வந்த கடற்படை வீரர் உட்பட மூவர் ரத்கமவில் கைது
மலையக மக்களின் வாழ்க்கை முறையை மாற்றியமைக்கவே நவீன கிராம மாதிரி வீடமைப்புத் திட்டம் அங்குரார்ப்பணம்
மின்சாரக் கட்டணம் தொடர்பாக மக்கள் மீது வீண்சுமை ஏற்றப்படாது
தமிழ் மக்களின் ஒற்றுமையை வெளிப்படுத்தும் களமாக உள்ளூராட்சி சபைத் தேர்தலை எதிர் கொண்டுள்ளோம்
மகா சிவராத்திரி தினத்தில் ஒலிபெருக்கி பாவனை
புசல்லாவை பெரட்டாசி தோட்ட வாகன விபத்தில் நால்வர் படுகாயம்
நாவலப்பிட்டி ரயில் நிலைய பகுதிகளில் பாதுகாப்பு அதிகரிப்பு
உள்ளூராட்சி சபை தேர்தலில் அரச சின்னத்திற்கு வாக்களித்தால் மட்டுமே கிழக்கில் அமைதி தொடரும்
மட்டக்களப்பின் சகல உள்ளூராட்சி சபைகளையும் ஆயுதக் குழு உதவியுடன் கைப்பற்ற அரசு முயற்சி
கடற்படை பஸ்- லொறி விபத்தில் ஒருவர் பலி, இருவர் படுகாயம்
வைத்தியர்களின் அலட்சியப் போக்கினால் பாம்புக்கடிக்கிலக்கான சிறுமி மரணம்
சுவீடன் நாட்டு பிரஜை விமான நிலையத்தில் கைது
கணவனின் தீராத நோயினால் மனமுடைந்த இளம் பெண் தனக்குதானே தீ மூட்டி தற்கொலை
உலக சந்தையில் காஸ் விலை குறையும் போது இங்கும் அதன் விலை குறைக்கப்பட வேண்டும்
இளம் பராயத்தவரை புனர்வாழ்வு முகாமில் தடுத்துவைக்க உத்தரவிடுவது சட்டவிரோதம்
எல்லாவல மேதானந்த தேரரின் குற்றச்சாட்டை ஆட்சேபித்து மட்டக்களப்பு ஷ்ரீமங்கள ராமய விகாராதிபதி உண்ணாவிரதம்
எல்லாவல மேதானந்த தேரரின் குற்றச்சாட்டை ஆட்சேபித்து மட்டக்களப்பு ஷ்ரீமங்கள ராமய விகாராதிபதி உண்ணாவிரதம்
கொள்ளையர்களினால் கடத்திச் செல்லப்பட்ட சமாதான நீதிவானை விடுவிக்க கோரிக்கை
நாட்டை ஒன்றிணைக்கும் ஜனாதிபதியின் நடவடிக்கைக்கு ஆதரவு தெரிவிக்கவே அவருடன் இணைந்தோம்
மட்டக்களப்பில் சர்வதேச மகளிர் தினத்தை கொண்டாட ஏற்பாடு
பஸ்ஸிலிருந்து கீழேவீழ்ந்த தாயும் குழந்தையும் ஆபத்தான நிலையில் வைத்தியசாலையில் அனுமதி
1 இலட்சத்துக்கும் அதிகமான ஆசிரியர்கள் இன்று முதல் சுகவீன விடுமுறை போராட்டம்
மகா சிவராத்திரி தினத்தின் மறுநாள் திருக்கோணேஸ்வரப் பெருமாள் வீதியுலா
வீதி, பாலம் நீண்டகாலமாக புனரமைப்பு செய்யப்படாததால் மக்கள் பெரும் அவதி
 
 
 
   
 
 
   
Home - Important News - Foreign News - Sports News - Sinhala News - Articles - Editorial - DR - Cartoon - Archives - Obituaries
© 2008. All Rights Reserved. Thinakkural.com / Thinakural.com - Site By Evosof.com