Thinakkural Tamil News Paper - The Independent Voice in Tamil

The Independent Voice in Tamil
Tuesday, March 04, 2008


Download latha tamil font
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
  Sri Lanka Forecast
 
 
 
 
 
 
 
HOT NEWS
Important News
இலங்கை இனப்பிரச்சினைக்கு இராணுவத் தீர்வு முடிவாக அமையாதென்பதில் இந்தியா உறுதி
[04 - March - 2008] [Font Size - A - A - A]
* தமிழ் சமூகம் தமக்கு அதிமுக்கியம் என்கிறார் பிரணாப் முகர்ஜி

இலங்கையின் இனப்பிரச்சினைக்கு இராணுவ தீர்வு ஒருபோதும் முடிவாக அமையாதென்றும் அந்த நிலைப்பாட்டில் தாங்கள் உறுதியாக இருப்பதாகவும் இந்தியா மீண்டும் வலியுறுத்தியுள்ளது.

இந்திய பாராளுமன்றத்தில் நேற்று திங்கட்கிழமை வெளிநாட்டு கொள்கையுடன் சம்பந்தப்பட்ட அபிவிருத்திகள் தொடர்பாக அறிக்கையொன்றை விடுத்து பேசும் போது அந்நாட்டு வெளிவிவகார அமைச்சரான பிரணாப் முகர்ஜி மேற்கண்டவாறு தெரிவித்திருக்கிறார்.

அவர் இலங்கை பற்றி இங்கு மேலும் குறிப்பிட்டிருப்பதாவது;

இந்தியா இலங்கையின் முன்னேற்றங்கள் குறித்து மிக உன்னிப்பாக கண்காணித்து வருகிறது. அத்துடன், அண்மைக் காலமாக அதிகரித்திருக்கும் வன்முறைகள் மற்றும் மோதல்கள் குறித்தும் கவலை கொள்கிறது.

அத்துடன், இலங்கை பிரச்சினைக்கு இராணுவ ரீதியிலான தீர்வு கிடையாது என்பதில் இந்தியா உறுதியான நிலைப்பாட்டில் இருக்கிறது. தமிழ் மக்கள் உள்ளிட்ட அனைத்து சமூகங்களும் ஏற்றுக்கொள்ளக்கூடிய ஐக்கிய இலங்கை என்ற கட்டமைப்புக்குள்ளான பேச்சுக்கள் மூலமான அரசியல் தீர்வொன்றிலேயே முன்னோக்கிய பாதை தங்கியிருக்கிறது.

இலங்கையுடனான கொடுக்கல் வாங்கல்களின் போது இலங்கையிலுள்ள தமிழ் சமூகம் என்பது எமக்கு தனியான அதிமுக்கிய விடயமாகவே இருக்கிறது. நாம் எப்போதும் அவர்களின் நலன்களில் அக்கறை செலுத்துகிறோம்.

அத்துடன், 13 ஆவது அரசியலமைப்புத் திருத்தத்தை முழுமையாக அமுல்படுத்த போவதாக இலங்கை அரசாங்கம் தெரிவித்திருப்பதை இந்தியா முதற்படியாக வரவேற்றுள்ளது.

இதேநேரம், நாம் எமது மீனவர்களுக்கு பாதுகாப்பு வழங்கப்பட வேண்டுமென்பதில் உணர்வுள்ளவர்களாக இருக்கிறோம். அதேவேளை, எமது மீனவர்கள், சர்வதேச கடற் பிரதேச எல்லைக் கோடுகளை மதிக்க வேண்டியதும் முக்கியம். இலங்கையில் நடைபெற்றுக் கொண்டிருக்கும் நடவடிக்கைகளை அவர்கள் மனதில் கொள்ள வேண்டும்.

Email this page Your Opinion Print this page
லவ் காஸின் விலையும் ரூ.261 ஆல் அதிகரிப்பு
இந்திய பாதுகாப்பு அமைச்சரையும் முப்படைத் தளபதிகளையும் இலங்கை இராணுவத் தளபதி இன்று சந்தித்துப் பேசுவார்
ரஷ்யாவின் புதிய ஜனாதிபதி இந்திய வம்சாவளியை சேர்ந்தவரா?
செட்டிகுளத்தில் இளைஞன் சுட்டுக்கொலை
வாதுவ சென்ற ரயிலில் குண்டுப்புரளி பீதியில் குதித்து ஓடிய பயணிகள்
ஊழியர் சேமலாப நிதியத்தின் மீள் பதிவுப் பணிகள் ஆரம்பம்
மலேசியாவுக்கு படகில் செல்ல முயற்சித்து கடலில் இருவாரங்களாக தத்தளித்த 71 பேர் கிழக்கில்
இலங்கை இனப்பிரச்சினைக்கு இராணுவத் தீர்வு முடிவாக அமையாதென்பதில் இந்தியா உறுதி
`பிரபாகரனை' வெளியிடுவதற்கு தணிக்கை சபை அனுமதித்தது
தொலைபேசி மூலம் மிரட்டி கப்பம் கோரி வந்த கடற்படை வீரர் உட்பட மூவர் ரத்கமவில் கைது
மலையக மக்களின் வாழ்க்கை முறையை மாற்றியமைக்கவே நவீன கிராம மாதிரி வீடமைப்புத் திட்டம் அங்குரார்ப்பணம்
மின்சாரக் கட்டணம் தொடர்பாக மக்கள் மீது வீண்சுமை ஏற்றப்படாது
தமிழ் மக்களின் ஒற்றுமையை வெளிப்படுத்தும் களமாக உள்ளூராட்சி சபைத் தேர்தலை எதிர் கொண்டுள்ளோம்
மகா சிவராத்திரி தினத்தில் ஒலிபெருக்கி பாவனை
புசல்லாவை பெரட்டாசி தோட்ட வாகன விபத்தில் நால்வர் படுகாயம்
நாவலப்பிட்டி ரயில் நிலைய பகுதிகளில் பாதுகாப்பு அதிகரிப்பு
உள்ளூராட்சி சபை தேர்தலில் அரச சின்னத்திற்கு வாக்களித்தால் மட்டுமே கிழக்கில் அமைதி தொடரும்
மட்டக்களப்பின் சகல உள்ளூராட்சி சபைகளையும் ஆயுதக் குழு உதவியுடன் கைப்பற்ற அரசு முயற்சி
கடற்படை பஸ்- லொறி விபத்தில் ஒருவர் பலி, இருவர் படுகாயம்
வைத்தியர்களின் அலட்சியப் போக்கினால் பாம்புக்கடிக்கிலக்கான சிறுமி மரணம்
சுவீடன் நாட்டு பிரஜை விமான நிலையத்தில் கைது
கணவனின் தீராத நோயினால் மனமுடைந்த இளம் பெண் தனக்குதானே தீ மூட்டி தற்கொலை
உலக சந்தையில் காஸ் விலை குறையும் போது இங்கும் அதன் விலை குறைக்கப்பட வேண்டும்
இளம் பராயத்தவரை புனர்வாழ்வு முகாமில் தடுத்துவைக்க உத்தரவிடுவது சட்டவிரோதம்
எல்லாவல மேதானந்த தேரரின் குற்றச்சாட்டை ஆட்சேபித்து மட்டக்களப்பு ஷ்ரீமங்கள ராமய விகாராதிபதி உண்ணாவிரதம்
எல்லாவல மேதானந்த தேரரின் குற்றச்சாட்டை ஆட்சேபித்து மட்டக்களப்பு ஷ்ரீமங்கள ராமய விகாராதிபதி உண்ணாவிரதம்
கொள்ளையர்களினால் கடத்திச் செல்லப்பட்ட சமாதான நீதிவானை விடுவிக்க கோரிக்கை
நாட்டை ஒன்றிணைக்கும் ஜனாதிபதியின் நடவடிக்கைக்கு ஆதரவு தெரிவிக்கவே அவருடன் இணைந்தோம்
மட்டக்களப்பில் சர்வதேச மகளிர் தினத்தை கொண்டாட ஏற்பாடு
பஸ்ஸிலிருந்து கீழேவீழ்ந்த தாயும் குழந்தையும் ஆபத்தான நிலையில் வைத்தியசாலையில் அனுமதி
1 இலட்சத்துக்கும் அதிகமான ஆசிரியர்கள் இன்று முதல் சுகவீன விடுமுறை போராட்டம்
மகா சிவராத்திரி தினத்தின் மறுநாள் திருக்கோணேஸ்வரப் பெருமாள் வீதியுலா
வீதி, பாலம் நீண்டகாலமாக புனரமைப்பு செய்யப்படாததால் மக்கள் பெரும் அவதி
 
 
 
   
 
 
   
Home - Important News - Foreign News - Sports News - Sinhala News - Articles - Editorial - DR - Cartoon - Archives - Obituaries
© 2008. All Rights Reserved. Thinakkural.com / Thinakural.com - Site By Evosof.com