|
ஊழியர் சேமலாப நிதியத்தின் அங்கத்தவர்களை மீள் பதிவு செய்வதற்கான தரவுகளை சேகரிக்கும் நடைமுறைகள் தற்போது இடம்பெறுகின்றன.
150 இற்கு மேற்பட்ட ஊழியர்களைக் கொண்ட நிறுவனங்களின் தகவல்களில் 50 சதவீதமானவை பூர்த்தி செய்யப்பட்டிருப்பதாக மத்தியவங்கி கூறுகிறது. இந்தப்பணியில் இணைந்துள்ள அங்கீகரிக்கப்பட்ட தனியார் நிறுவனம் மாவட்ட அடிப்படையில் தரவுகளை சேகரித்து 6 மாதகாலப்பகுதிக்குள் வேலைகளைப் பூர்த்தி செய்வதற்கு எதிர்பார்த்துள்ளது. 150 இற்கும் குறைந்த ஊழியர்களைக் கொண்ட நிறுவனங்களின் தரவுகளை சேகரிக்கும் நடைமுறைகள் தொழிற் திணைக்கள அதிகாரிகளால் மேற்கொள்ளப்படுகின்றன. எனவே, சரியான தகவல்களை வழங்குவது ஒவ்வொரு ஊழியர்களதும் பொறுப்பாகும் என ஊழியர் சேமலாப நிதியத்தின் அத்தியட்சர் ஏ.வை. தர்மதாச தெரிவித்துள்ளார். |