வவுனியா செட்டிகுளம் பகுதியில் நேற்று முன்தினம் ஞாயிற்றுக்கிழமை இரவு படையினரால் இளைஞரொருவர் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளார்.
செட்டிகுளம் தட்டான்குளம் பகுதியில் ஞாயிற்றுக்கிழமை இரவு இடம்பெற்ற இந்தச் சம்பவத்தில் விடுதலைப்புலிகளின் உறுப்பினர் ஒருவரே கொல்லப்பட்டதாக படையினர் தெரிவித்துள்ளனர்.
இவரது சடலம் நேற்றுக்காலையே அப்பகுதியிலிருந்து கண்டுபிடிக்கப்பட்டதாகவும் ரி.56 ரகத் துப்பாக்கியும் அதற்குரிய ரவைகளும் சயனைட்டும் இவரிடமிருந்து மீட்கப்பட்டதாகவும் படையினர் தெரிவித்தனர்.
இவரது சடலம் இராணுவ சீருடையுடன் காணப்படுவதாகத் தெரிவிக்கப்படுவதுடன் சடலம் நேற்று பிற்பகல் 1.30 மணியளவில் வவுனியா ஆஸ்பத்திரியில் செட்டிகுளம் பொலிஸாரால் ஒப்படைக்கப்பட்டது.