ஷெல் காஸ் விலை அதிகரிக்கப்பட்ட நிலையில் லவ் காஸின் விலையும் நேற்று திங்கட்கிழமை நள்ளிரவு முதல் அதிகரிக்கப்பட்டுள்ளது.
இதன்படி 12.5 கிலோ லவ் காஸின் விலை நள்ளிரவு முதல் 261 ரூபாவால் அதிகரிக்கப்பட்டுள்ளது.
இதற்கமைய நள்ளிரவு முதல் 12.5 கிலோ லவ் காஸ் சிலிண்டர் ஒன்றின் விலை 1,721 ரூபாவாக அதிகரிக்கப்பட்டுள்ளது.
கடந்த வெள்ளிக்கிழமை நள்ளிரவு முதல் ஷெல் காஸின் விலை 261 ரூபாவால் அதிகரிக்கப்பட்டதன் மூலம் சிலிண்டர் ஒன்றின் விலை 1,749 ரூபாவாக அதிகரிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.