Thinakkural Tamil News Paper - The Independent Voice in Tamil

The Independent Voice in Tamil
Tuesday, March 04, 2008


Download latha tamil font
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
  Sri Lanka Forecast
 
 
 
 
 
 
 
HOT NEWS
Sports news
பெங்களூர் ஓப்பன் டெனிஸ் ஆரம்பம்; முன்னணி வீராங்கனைகள் பங்கேற்பு
[04 - March - 2008] [Font Size - A - A - A]
முன்னணி வீராங்கனைகள் பங்கேற்கும் பெங்களூர் ஓப்பன் டெனிஸ் போட்டி நேற்று தொடங்கியது.

கர்நாடக டெனிஸ் சங்கம் சார்பில் 2006 ஆம் ஆண்டு முதல் சர்வதேச பெண்கள் டெனிஸ் போட்டி பெங்களூரில் நடத்தப்பட்டு வருகிறது. 3 ஆவது முறையாக இந்த ஆண்டு நடைபெறும் இப்போட்டி தரம் உயர்வு (டையர் 2) பெற்றுள்ளது.

2.40 கோடி ரூபா பரிசுத்தொகைக்கான பெங்களூர் ஓப்பன் டெனிஸ் போட்டி நேற்று திங்கட்கிழமை தொடங்கியது. 9 ஆம் திகதிவரை இந்தப்போட்டி நடைபெறுகிறது.

இந்தப் போட்டியில் ஒற்றையர் பிரிவில் உலகத் தர வரிசையில் 7 ஆவது இடத்திலிருக்கும் செரீனா வில்லியம்ஸ், 8 ஆவது இடத்திலுள்ள வீனஸ் வில்லியம் (அமெரிக்கா), 15 ஆவது இடத்திலுள்ள பட்டி ஷிண்டர் (சுவிற்சர்லாந்து) 19 ஆவது இடத்திலுள்ள ஆக்னஸ் (ஹங்கேரி), 20 ஆவது இடத்திலுள்ள சிபில் பாமெர் (ஆஸ்திரியா), 22 ஆவது இடத்திலிருக்கும் வெரா சோனாரெவா (ரஷியா), 26 ஆவது இடத்திலுள்ள மரியா கிர்லெங்கோ (ரஷியா) உட்பட 32 வீராங்கனைகள் கலந்துகொண்டு மோதுகின்றார்கள்.

இதன் இரட்டையர் பிரிவில் 16 ஜோடிகள் கலந்துகொள்கின்றன. வீண் சர்ச்சைகளை தவிர்க்க இந்தியாவில் ஆடமாட்டேனென்று அறிவித்துள்ள சானியா மிர்சா இந்தப் போட்டியில் ஆடவில்லை. இதனால் அவரது ரசிகர்கள் ஏமாற்றத்துக்குள்ளாகியுள்ளனர்.

Email this page Your Opinion Print this page
ரசிகர்களை குரங்குகளெனத் திட்டினாரா மீண்டும் சர்ச்சையில் சிக்குகிறார் ஹர்பஜன்
2 ஆவது டெஸ்டில் பங்களாதேஷ் இனிங்ஸால் தோல்வி டெஸ்ட் தொடரை தென் ஆபிரிக்கா கைப்பற்றியது
விளையாட்டுத் துளிகள்
சச்சினின் பெருந்தன்மையால் சிட்னியில் மற்றொரு சர்ச்சை தவிர்க்கப்பட்டது
18 வருடகால கிரிக்கெட் வரலாற்றில் சிட்னியில் அடித்த சதம் மிகவும் மதிப்புமிக்கது
டுபாய் ஓப்பன் டெனிஸ் போட்டியில் டெமன்டிவா கிண்ணத்தை கைப்பற்றினார்
பெங்களூர் ஓப்பன் டெனிஸ் ஆரம்பம்; முன்னணி வீராங்கனைகள் பங்கேற்பு
 
 
 
   
 
 
   
Home - Important News - Foreign News - Sports News - Sinhala News - Articles - Editorial - DR - Cartoon - Archives - Obituaries
© 2008. All Rights Reserved. Thinakkural.com / Thinakural.com - Site By Evosof.com