நீர்கொழும்புக்குச் சென்ற ஒருவர் அங்கு ஒரு ஹோட்டலில் தன்னை வெகுவாகக் கவர்ந்த காட்சியொன்றை விபரித்தார்.
இவர் உணவு அருந்துவதற்காக ஹோட்டலுக்குள் நுழைந்த போது அங்கு இருதயத்தின் பெரிய வரைபடமொன்று தொங்கவிடப்பட்டிருப்பதைக் கண்டார். " புகைபிடித்தல் உங்கள் இருதயத்துக்கு தீங்கு விளைவிக்கும். அதை நாங்கள் விரும்பவில்லை. அதனால்தான், நாங்கள் இங்கு சிகரெட் விற்பனை செய்வதில்லை" என்றவாறு வாக்கியம் அதில் எழுதப்பட்டிருந்ததாம். அந்த ஹோட்டல் மிகவும் சுத்தமாக வைக்கப்பட்டிருந்ததையும் இவர் அவதானித்தார்.
நல்லதை மனதில் பதிய வைக்கும் வகையில் செய்திருக்கிறார்கள்!