அவுஸ்திரேலியாவிலுள்ள பாடசாலைகளில் சீக்கிய மாணவர்கள் தலைப்பாகை அணிவதற்குத் தடை விதிக்கப்பட்டுள்ளது.
அவுஸ்திரேலியாவின் குயின்லாந்து மாகாணத்திலுள்ள ஓர்மிஸ்டன் கல்லூரியிலேயே இத்தடை முதன்முதலாக அமுல்படுத்தப்பட்டுள்ளது.
இவ்விடயம் தொடர்பில் மாணவர்களின் பெற்றோரை அழைத்த கல்லூரி நிர்வாகம்;
தலைமுடியை சீராக கத்தரித்து சீவியும் மாணவர்கள் பாடசாலைக்கு தலைப்பாகை அணியாமலும் வருகை தரவேண்டும்.
தலைப்பாகை அணிவதற்கு பாடசாலை விதிகளில் இடமில்லை. அதனால் இக்கட்டுப்பாடுகளை அம்மாணவர்கள் விரும்பாவிட்டால் அவர்களை கல்லூரியிலிருந்து நீக்குவதைத் தவிர வேறுவழி இல்லையெனத் தெரிவித்துள்ளது.
இவ்விடயம் தொடர்பில் பாடசாலையிலிருந்து நீக்கப்பட்ட மாணவன் ஒருவனின் பெற்றோர் நீதிமன்றில் புகார் செய்ததைத் தொடர்ந்து இவ்விடயம் தொடர்பான விசாரணைகள் நடைபெற்று வருகின்றன.