இந்தோனேசியாவில் சுமத்ரா தீவு அருகில் கடலுக்கு அடியில் திங்கட்கிழமை அதிகாலை கடும் பூகம்பம் ஏற்பட்டது.
கடலுக்கு அடியில் 34 கி.மீ. ஆழத்தில் இந்த பூகம்பம் ஏற்பட்டது. 6.4 ரிக்டர் அளவு பதிவாகியிருந்தது.
பொருள் சேதம் மற்றும் உயிர்ச் சேதம் குறித்து உடனடியாக எந்தத் தகவலும் இல்லை. கடல் கோள் எச்சரிக்கை ஏதும் விடுக்கப்படவில்லை. மேற்கு சுமத்ரா பகுதியில் உள்ள பைனான் நகரிலிந்து 160 கி.மீ. தொலைவில் இந்த பூகம்பம் மையம் கொண்டிருந்தது.
சுமத்ரா தீவின் மேற்கு பகுதி கடந்த ஒரு மாதமாக அடுத்தடுத்து பூகம்பத்தால் பாதிக்கப்பட்டு வருகிறது. கடந்த பெப்ரவரி 20 ஆம் திகதி 7.5 ரிக்டர் என்ற அளவில் பூகம்பம் ஏற்பட்டது. இதில் 3 பேர் கொல்லப்பட்டனர். பலர் காயமடைந்தனர்.
இந்தோனேசியாவின் சுமத்ரா தீவு பசுபிக் பூமி தட்டின் விளிம்பில் இருப்பதால் அடிக்கடி பூகம்பம் ஏற்படுவதாக புவியியலாளர்கள் தெரிவிக்கின்றனர்.