Thinakkural Tamil News Paper - The Independent Voice in Tamil

The Independent Voice in Tamil
Wednesday, March 05, 2008


Download latha tamil font
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
  Sri Lanka Forecast
 
 
 
 
 
 
 
HOT NEWS
Important News
அரசியலமைப்பு பேரவை உறுப்பினர் நியமனம் தொடர்பான அரசின் அறிவிப்புக்கு ஐ.தே.க., ஜே.வி.பி.கடும் எதிர்ப்பு
[05 - March - 2008] [Font Size - A - A - A]
* பாராளுமன்றத்தில் கடும் சர்ச்சை

பாராளுமன்றத்தெரிவுக் குழுவின் அறிக்கை கிடைத்த பின்னரே அரசியலமைப்பு பேரவைக்கு உறுப்பினர்களை நியமிக்க முடியுமென்ற அரசாங்கத்தின் அறிவிப்புக்கு ஐ.தே.க.வும் ஜே.வி.பி.யும் கடுமையான எதிர்ப்பைத் தெரிவித்துள்ள அதேசமயம் அரச தரப்பின் இந்த வாதத்தை முற்றாக நிராகரிப்பதாக எதிர்க்கட்சித்தலைவர் ரணில் விக்கிரம சிங்க நேற்று செவ்வாய்க்கிழமை பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.

பாராளுமன்ற தெரிவுக்குழுவின் அறிக்கை கிடைத்த பின்னர்தான் அரசியலமைப்பு பேரவையை உருவாக்க முடியுமென அரசாங்கம் கூறுமானால் தேர்தல் மறுசீரமைப்பு தொடர்பான பாராளுமன்ற தெரிவுக்குழுவின் அறிக்கை கிடைத்த பின்னரேயே தேர்தல்களையும் நடத்த வேண்டுமென ஜே.வி.பி.எம்.பி. அநுரகுமார திசாநாயக்கா சுட்டிக்காட்டினார்.

பாராளுமன்றத்தில் நேற்று செவ்வாய்க்கிழமை எதிர்க்கட்சிகள் ஒன்றிணைந்து பாராளுமன்ற தெரிவுக்குழுவின் அறிக்கை கிடைத்தபின் அரசியலமைப்பு பேரவைக்கு உறுப்பினர்நியமனம் என்ற அரசாங்கத்தின் தீர்மானத்திற்கு தமது கடும் எதிர்ப்பை வெளிப்படுத்தின.

இது தொடர்பாக எதிர்க்கட்சி பிரதம கொரடா ஜோசப் மைக்கல் பெரேரா அறிக்கை யொன்றை விடுத்து உரையாற்றினார்.

அண்மைய காலங்களில் அரசியலமைப்பு பேரவைக்கு உறுப்பினரை நியமிக்காமை குறித்தும், அதனால் ஏற்படும் பாதகங்கள் பற்றியும் எதிர்க் கட்சிகள் இச்சபையில் சுட்டிக்காட்டி வருகின்றன.

மாயதுன்ன பாராளுமன்றத்தில் பணியாற்றுவதால் அவரை அரசியலமைப்பு பேரவைக்கு நியமிக்க முடியாதென அரசாங்கம் அப்போது கூறியது. ஆனால் இப்போது தெரிவுக்குழுவின் அறிக்கைக்கு காத்திருப்பதாக கூறுகிறது.

அரசாங்கத்தின் இப்போலிக்காரணங்களை ஒருபோதுமே ஏற்க முடியாது. தமக்கு சாதகமான ஒருவரை நியமிக்க அரசாங்கம் முயலுவதாக ஜோசப் மைக்கல் பெரேரா தெரிவித்தார்.

ஜே.வி.பி.எம்.பி.அநுரகுமார திசாநாயக்கா கருத்து தெரிவிக்கையில்;

பாராளுமன்ற தெரிவுக் குழுவின் அறிக்கை கிடைத்த பின்னரே அரசியலமைப்பு பேரவைக்கு உறுப்பினரை நியமிக்க முடியுமென அரசாங்கம் கூறுவது வெட்கக்கேடான விடயமாகும். ஜனாதிபதி தாமதம் காட்டுவதை ஒருபோதுமேஏற்க முடியாது.

அரசாங்கம் விடாப்பிடியாக இருக்குமேயானால் தேர்தல் மறுசீரமைப்பை மேற்கொள்ள நியமிக்கப்பட்ட பாராளுமன்ற தெரிவுக்குழுவின் அறிக்கை கிடைக்கும்வரையும் எந்தத் தேர்தலையும் நடத்த முடியாது.

எனவே ஜே.வி.பி.யின் நிலைப்பாட்டை ஜனாதிபதியிடம் ஆளும் கட்சி அமைச்சர்கள் தெளிவாக எடுத்துக்கூற வேண்டும். இதில் எத்தகைய விட்டுக்கொடுப்புக்கும் இடமில்லையென்றார்.

இதன்போது குறுக்கிட்ட ரணில் விக்கிரமசிங்க;

பாராளுமன்ற தெரிவுக் குழுவின் அறிக்கை கிடைக்கும்வரை காத்திருக்கிறோமெனக் கூறி அரசாங்கம் தனது பொறுப்பிலிருந்து தப்பிக்க முடியாது.

அரசியலமைப்பு பேரவைக்கு உறுப்பினரை நியமிப்பதற்கு ஜனாதிபதி காட்டும் தாமதத்திற்கான காரணத்தை அவருடனான சந்திப்பின்போது நாம் ஒருபோதுமே ஏற்கவில்லை. உறுப்பினரை நியமிப்பதன் மூலம் ஒருபோதுமே ஜனாதிபதியின் அதிகாரங்கள் குறைந்துவிடப்போவதில்லை என்றார்.

அப்போது சபாநாயகர் வி.ஜே.மு.லொக்குபண்டார கருத்து தெரிவிக்கையில். இவ்விவகாரம் மிகவும் முக்கியமானதெனவும், எனவே இதனை அமைச்சர்கள் ஜனாதிபதியிடம் எடுத்துக் கூறவேண்டுமென்றார்.

இவ்வேளை குறக்கிட்ட ரவி கருணாநாயக்கா, எதிர்க்கட்சிகளுடைய கேள்விகளுக்கு எப்போதும் துள்ளிக்குதித்து விடையளிக்கும் அமைச்சர் ஜெயராஜ் மற்றும் நிமால் சிறிபால டீ சில்வா ஆகியோர் இவ்விவகாரத்தில் மௌனம் காப்பதாகவும், அவர்கள் இதற்கு பதிலளிக்க வேண்டுமென வலியுறுத்தினார்.

இவ்வாறு சர்ச்சை நீடித்துச் செல்கையில் குறுக்கிட்ட சபாநாயகர் முன்னைய சபாநாயகர்கள் கடைப்பிடிக்காத ஒன்றை தாம் கடைப்பிடிப்பதாகவும் அதாவது அரசியலமைப்பு பேரவை விவகாரம் பற்றி சபை ஆராய்ந்த விடயங்களை தாம் ஜனாதிபதிக்கு விடய முக்கியத்துவம் கருதி அனுப்பி வைப்பதாகவும் குறிப்பிட்டார்.

இதையடுத்து சர்ச்சை முடிவுக்கு வந்த அதேவேளை, இச்சர்ச்சைக்கு மத்தியில் எதிர்க்கட்சித் தலைவர் ரணில் விக்கிரமசிங்க 13 ஆவது திருத்தம் அரசியலமைப்பில் தற்போது உள்ளதாகவும் அதை நடைமுறைப்படுத்த ஐ.தே.க.தனது ஆதரவை எப்போதும் நல்க தயாராகவிருப்பதாகவும் குறிப்பிட்டார்.

Email this page Your Opinion Print this page
அநுராவுக்கு கடும் சுகவீனம்
13 ஆவது திருத்தத்தை அமுல்படுத்த ஜனாதிபதி ஜே.வி.பி. யுடன் பேசுவார்
சுகவீன விடுமுறைப் போராட்டம் நடத்தும் ஆசிரியர்களை சாடுகிறார் பிரதம நீதியரசர்
பெரியமடுவில் உழவு இயந்திரத்தில் சென்ற 4 பொதுமக்கள் கிளைமோர் தாக்குதலில் பலி
கிளைமோர்கள், வெடிபொருட்கள் கற்பிட்டி நரக்கள்ளி பகுதியில் மீட்பு
அக்கரைப்பற்றில் வயற்பகுதியில் சூட்டுக்காயத்துடன் இளைஞன் சடலம்
கிழக்கு தேர்தல் தொடர்பான பவ்ரலின் அடிப்படை உரிமை மீறல் மனு நிராகரிப்பு
சமாதானத்தில் கொண்டிருக்கும் ஆர்வத்தை துணிவுடன் வெளிப்படுத்துமாறு அழைப்பு
சிவில் பாதுகாப்பு குழுக் கூட்டத்தில் தூங்கிய மாத்தறை பொலிஸ் அதிகாரிக்கு இடமாற்றம்
தம்புள்ள குண்டுவெடிப்பு சம்பவத்துடன் தொடர்புடைய சிங்களப் பெண்ணுக்கு விளக்கமறியல்
உள்ளூராட்சி தேர்தல் நீதியாக நடைபெறும் பவ்ரல் அமைப்பிடம் ஜனாதிபதி உறுதியளிப்பு
வெளிநாட்டு வேலைவாய்ப்பு மோசடி முகவருக்கு 8 வருட சிறைவாசம்
மனித உரிமை ஆணைக்குழுவில் தந்தையும் மகனும் சரண்
முக்கோணத் தொடரின் 2 ஆவது இறுதியாட்டத்திலும் வென்று சாம்பியன் கிண்ணத்தை இந்தியா கைப்பற்றியது
சிவராத்திரி தினமன்று மதுவிற்பனை நிலையங்களை மூடுவதற்கு நடவடிக்கையெடுக்குமாறு வேண்டுகோள்
சிவராத்திரி தினத்தில் ஊரடங்கு நீக்கம்
வடமேல் மாகாணசபை, புத்தளம் நகரசபை உறுப்பினர்களின் வாகனம் ,வீடு மீது தாக்குதல்
வவுனியாவில் கடத்தப்பட்ட 5 பேர் விடுவிப்பு உறவினர்கள் நீதிபதியிடம் தெரிவிப்பு
சிறுவர் துஷ்பிரயோகம், கலாசார சீரழிவு குடாநாட்டில் மோசமாக அதிகரிப்பு
அரசின் கட்டுப்பாட்டிலுள்ள பகுதியிலிருந்து ஆட்கள் காணாமல்போவதற்கு அரசே காரணம்
கூட்டமைப்பு எம்.பி.க்கள் கொழும்பு வரும்போது பலத்த கெடுபிடிகள்
ஹல்தும்முல்லையில் பஸ்-லொறி விபத்து பாடசாலை மாணவர் உட்பட 34 பேர் காயம்
யாழ்.- கொழும்பு நோயாளர் விமான சேவையை மீண்டும் திங்கள் முதல் ஐ.சி.ஆர்.சி. ஆரம்பித்தது
அரசியலமைப்பு பேரவை உறுப்பினர் நியமனம் தொடர்பான அரசின் அறிவிப்புக்கு ஐ.தே.க., ஜே.வி.பி.கடும் எதிர்ப்பு
வெளிநாட்டு இராணுவத்தலையீடுகள் வருமெனில் அதனை முறியடிக்க ஒருபோதும் தயங்க மாட்டோம்
ஆட்டை மோதிய இ.போ.ச. பஸ் சாரதி தங்க மோதிரத்தை கழற்றிக் கொடுத்தார்
மாணவர்களின் வீதிமறியல் போராட்டம் அதிபர், உப அதிபரை நீதிமன்றம் எச்சரித்து விடுதலை
வட,கிழக்கு மக்கள் சகல உரிமைகளுடனும் வாழக்கூடிய சூழலை ஏற்படுத்துவது அவசியம்
`வாக்காளர் பதிவு தொடர்பில் அனைவரும் அக்கறையுடன் செயற்பட வேண்டும்'
இ.தொ.ஐ.மு.வின் மனித உரிமை தொடர்பாக தாக்கல் செய்யப்பட்ட மனு விசாரணைக்கு ஏற்றுக் கொள்ளப்பட்டமை வரவேற்கத்தக்கது
அவுஸ்திரேலிய சுற்றுப் பயணம் எனது வாழ்க்கையில் திருப்புமுனை
 
 
 
   
 
 
   
Home - Important News - Foreign News - Sports News - Sinhala News - Articles - Editorial - DR - Cartoon - Archives - Obituaries
© 2008. All Rights Reserved. Thinakkural.com / Thinakural.com - Site By Evosof.com