Thinakkural Tamil News Paper - The Independent Voice in Tamil

The Independent Voice in Tamil
Wednesday, March 05, 2008


Download latha tamil font
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
  Sri Lanka Forecast
 
 
 
 
 
 
 
HOT NEWS
Important News
யாழ்.- கொழும்பு நோயாளர் விமான சேவையை மீண்டும் திங்கள் முதல் ஐ.சி.ஆர்.சி. ஆரம்பித்தது
[05 - March - 2008] [Font Size - A - A - A]
சர்வதேச செஞ்சிலுவைச் சங்கம் (ஐ.சி.ஆர்.சி) யாழ்ப்பாணத்திற்கும் கொழும்பிற்குமிடையிலான நோயாளர் விமானப் போக்குவரத்துச் சேவையை கடந்த திங்கட்கிழமை முதல் மீண்டும் ஆரம்பித்துள்ளது.

விசேட மருத்துவ சிகிச்சை தேவைப்படும் ஒன்பது நோயாளர்களும் அவர்களுடன் ஐந்து உதவியாளர்களும் இரு வைத்தியர்களும் இவ் விமான சேவை மூலம் கொழும்பு சென்றிருந்தனர்.

செப்டெம்பர் 2006 முதல் யாழ்.குடாநாட்டிலிருந்து விசேட சத்திர சிகிச்சை, மருத்துவ பரிசோதனைகள் அல்லது சிகிச்சைகள் பெற முடியாத நிலையில் இருந்த நோயாளர்கள், ஐ.சி.ஆர்.சி.யால் அமர்த்தப்பட்ட இவ் விமானசேவை மூலம் சிகிச்சைக்காக கொண்டுவரப்பட்டனர். தமது சேவைக்கென தலைநகரில் பயிற்சிகள் தேவைப்பட்ட மருத்துவப் பணியாளர்கள், ஆய்வுகூட மாதிரிகள் மற்றும் குளிர்ப்பெட்டிகளில் எடுத்துச் செல்லப்பட வேண்டிய தடுப்பூசி மருந்துகள் போன்றவற்றின் கிரமமான போக்குவரத்துக்கு ஐ.சி.ஆர்.சி.யின் இவ் விமான சேவை மூலம் வசதியளிக்கப்பட்டது.

இவ்வருடம் ஜனவரி மாதம் முதல் இச் சேவை தற்காலிகமாக நிறுத்தப்பட்டாலும் நோயாளர்களினதும் அவசர மருந்து வகைகளினதும் கிரமமான விமான போக்குவரத்துக்கு ஐ.சி.ஆர்.சி. தொடர்ந்தும் உதவியளித்தது.

விமானசேவை சம்பந்தமான நடவடிக்கை மாற்றங்களுக்கு நாமும் எம்மைத் தயார் செய்துகொள்ளவும். அதேவேளை, பயணிகளின் பாதுகாப்பையும் கருத்திற்கொண்டு யாழ்ப்பாணத்துக்கும் கொழும்புக்குமிடையிலான ஐ.சி.ஆர்.சி. யின் இவ் விமான சேவையை நாம் தற்காலிகமாக நிறுத்த வேண்டியிருந்தது.

நோயாளர்கள் கடல், தரை, மார்க்கமாக 30 மணித்தியாலங்களுக்கு மேலாக பயணம் செய்து கொழும்பு வந்து தமது மருத்துவ சேவைகளைப் பெற்றுக்கொள்ள வேண்டிய கடினமான ஒரு நிலைமை இருப்பதை அறிந்திருந்த நாம் மிக அழுத்தமான சூழ்நிலைகள் மத்தியிலும் முயற்சி எடுத்து மீண்டும் இச்சேவையை ஆரம்பித்துள்ளோம் என ஐ.சி.ஆர்.சி.யின் கொழும்புக்கான தலைமை பேராளர் லண்டன் கோவ் தெரிவித்தார்.

03.02.2008 முதல் வாரம் இரு தடவைகள் வாடகைக்கு அமர்த்தப்பட்ட சிறுரக விமானம் மூலம் (பீச் கிறாவ் B 1900 C ) ஐ.சி.ஆர்.சி.யின் இச் சேவை நடைபெறவுள்ளது. இவ் விமானத்தில் 15 பேர் பயணம் செய்யலாம்.

தடுப்பு மற்றும் அவசர மருந்து வகைகளை கடல் மார்க்கமாக கொண்டுவரின் அதற்கு ஒரு மாதமளவில் செல்லலாம். இவ்விடயத்தில் ஐ.சி.ஆர்.சி.யின் விமான சேவை பெறுமதி மிக்கதொன்று. இவ் விமானசேவை மூலம் எமது சுகாதார சேவைப் பணியாளர்கள் சுகாதார அமைச்சினால் ஒழுங்கு செய்யப்படும் பயிற்சிகளிலும் பங்குபற்றி தமது தொழில் ஆற்றலை விருத்தி செய்துகொள்ள இலகுவாகிறதென யாழ். சுகாதார சேவைகள் பிராந்தியப் பணிப்பாளர் வைத்திய கலாநிதி கேதீஸ்வரன் தெரிவித்தார்.

Email this page Your Opinion Print this page
அநுராவுக்கு கடும் சுகவீனம்
13 ஆவது திருத்தத்தை அமுல்படுத்த ஜனாதிபதி ஜே.வி.பி. யுடன் பேசுவார்
சுகவீன விடுமுறைப் போராட்டம் நடத்தும் ஆசிரியர்களை சாடுகிறார் பிரதம நீதியரசர்
பெரியமடுவில் உழவு இயந்திரத்தில் சென்ற 4 பொதுமக்கள் கிளைமோர் தாக்குதலில் பலி
கிளைமோர்கள், வெடிபொருட்கள் கற்பிட்டி நரக்கள்ளி பகுதியில் மீட்பு
அக்கரைப்பற்றில் வயற்பகுதியில் சூட்டுக்காயத்துடன் இளைஞன் சடலம்
கிழக்கு தேர்தல் தொடர்பான பவ்ரலின் அடிப்படை உரிமை மீறல் மனு நிராகரிப்பு
சமாதானத்தில் கொண்டிருக்கும் ஆர்வத்தை துணிவுடன் வெளிப்படுத்துமாறு அழைப்பு
சிவில் பாதுகாப்பு குழுக் கூட்டத்தில் தூங்கிய மாத்தறை பொலிஸ் அதிகாரிக்கு இடமாற்றம்
தம்புள்ள குண்டுவெடிப்பு சம்பவத்துடன் தொடர்புடைய சிங்களப் பெண்ணுக்கு விளக்கமறியல்
உள்ளூராட்சி தேர்தல் நீதியாக நடைபெறும் பவ்ரல் அமைப்பிடம் ஜனாதிபதி உறுதியளிப்பு
வெளிநாட்டு வேலைவாய்ப்பு மோசடி முகவருக்கு 8 வருட சிறைவாசம்
மனித உரிமை ஆணைக்குழுவில் தந்தையும் மகனும் சரண்
முக்கோணத் தொடரின் 2 ஆவது இறுதியாட்டத்திலும் வென்று சாம்பியன் கிண்ணத்தை இந்தியா கைப்பற்றியது
சிவராத்திரி தினமன்று மதுவிற்பனை நிலையங்களை மூடுவதற்கு நடவடிக்கையெடுக்குமாறு வேண்டுகோள்
சிவராத்திரி தினத்தில் ஊரடங்கு நீக்கம்
வடமேல் மாகாணசபை, புத்தளம் நகரசபை உறுப்பினர்களின் வாகனம் ,வீடு மீது தாக்குதல்
வவுனியாவில் கடத்தப்பட்ட 5 பேர் விடுவிப்பு உறவினர்கள் நீதிபதியிடம் தெரிவிப்பு
சிறுவர் துஷ்பிரயோகம், கலாசார சீரழிவு குடாநாட்டில் மோசமாக அதிகரிப்பு
அரசின் கட்டுப்பாட்டிலுள்ள பகுதியிலிருந்து ஆட்கள் காணாமல்போவதற்கு அரசே காரணம்
கூட்டமைப்பு எம்.பி.க்கள் கொழும்பு வரும்போது பலத்த கெடுபிடிகள்
ஹல்தும்முல்லையில் பஸ்-லொறி விபத்து பாடசாலை மாணவர் உட்பட 34 பேர் காயம்
யாழ்.- கொழும்பு நோயாளர் விமான சேவையை மீண்டும் திங்கள் முதல் ஐ.சி.ஆர்.சி. ஆரம்பித்தது
அரசியலமைப்பு பேரவை உறுப்பினர் நியமனம் தொடர்பான அரசின் அறிவிப்புக்கு ஐ.தே.க., ஜே.வி.பி.கடும் எதிர்ப்பு
வெளிநாட்டு இராணுவத்தலையீடுகள் வருமெனில் அதனை முறியடிக்க ஒருபோதும் தயங்க மாட்டோம்
ஆட்டை மோதிய இ.போ.ச. பஸ் சாரதி தங்க மோதிரத்தை கழற்றிக் கொடுத்தார்
மாணவர்களின் வீதிமறியல் போராட்டம் அதிபர், உப அதிபரை நீதிமன்றம் எச்சரித்து விடுதலை
வட,கிழக்கு மக்கள் சகல உரிமைகளுடனும் வாழக்கூடிய சூழலை ஏற்படுத்துவது அவசியம்
`வாக்காளர் பதிவு தொடர்பில் அனைவரும் அக்கறையுடன் செயற்பட வேண்டும்'
இ.தொ.ஐ.மு.வின் மனித உரிமை தொடர்பாக தாக்கல் செய்யப்பட்ட மனு விசாரணைக்கு ஏற்றுக் கொள்ளப்பட்டமை வரவேற்கத்தக்கது
அவுஸ்திரேலிய சுற்றுப் பயணம் எனது வாழ்க்கையில் திருப்புமுனை
 
 
 
   
 
 
   
Home - Important News - Foreign News - Sports News - Sinhala News - Articles - Editorial - DR - Cartoon - Archives - Obituaries
© 2008. All Rights Reserved. Thinakkural.com / Thinakural.com - Site By Evosof.com