Thinakkural Tamil News Paper - The Independent Voice in Tamil

The Independent Voice in Tamil
Wednesday, March 05, 2008


Download latha tamil font
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
  Sri Lanka Forecast
 
 
 
 
 
 
 
HOT NEWS
Important News
முக்கோணத் தொடரின் 2 ஆவது இறுதியாட்டத்திலும் வென்று சாம்பியன் கிண்ணத்தை இந்தியா கைப்பற்றியது
[05 - March - 2008] [Font Size - A - A - A]
அவுஸ்திரேலியாவில் நடைபெற்ற முக்கோண ஒருநாள் தொடரில் அவுஸ்திரேலியாவுக்கு எதிரான 2 ஆவது இறுதி ஆட்டத்தில் இந்தியா 9 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று சாம்பியன் கிண்ணத்தை வென்றுள்ளது.

உலகச் சாம்பியன் அவுஸ்திரேலியாவை அதன் சொந்த மண்ணிலேயே தோற்கடித்து இந்தியா வெற்றிவாகை சூடியிருக்கிறது.

அவுஸ்திரேலியாவில் நடைபெற்ற முக்கோண ஒருநாள் போட்டித் தொடரில் இந்தியா மற்றும் அவுஸ்திரேலிய அணிகள் இறுதிச் சுற்றுக்கு முன்னேறின. 3 போட்டிகளைக் கொண்ட இறுதிச் சுற்றில் முதல் இறுதியாட்டத்தில் இந்தியா வெற்றி பெற்றது. இரண்டாவது இறுதியாட்டம் நேற்று பிரிஸ்பேனில் நடைபெற்றது.

நாணயச் சுழற்சியில் வெற்றி பெற்ற இந்தியா முதலில் ஆடியது. தொடக்க வீரர்களான சச்சின் டெண்டுல்கர் மற்றும் உத்தப்பா நிதானமாக ஆடி இந்தியாவுக்கு சிறப்பான தொடக்கத்தை ஏற்படுத்தினர். எனினும் 30 ஓட்டங்கள் எடுத்த நிலையில் உத்தப்பா ஆட்டமிழந்தார். அவர் கிளார்க் பந்துவீச்சில் ஆட்டமிழந்தார். அவரை அடுத்து வந்த காம்பீர் குறைந்த ஓட்டங்களில் ஆட்டமிழந்தார். அதன்பின்னர் ஆட வந்த யுவராஜ் சிங், டெண்டுல்கரோடு ஜோடி சேர்ந்து சிறப்பாக ஆடினார்.

யுவராஜ் சிங் அதிரடியாக ஆடி மின்னல் வேகத்தில் 38 ஓட்டங்களைக் குவித்து ஆட்டமிழந்தார். பின்னர் கப்டன் தோனி ஆட வந்தார். தோனியும் டெண்டுல்கரும் சிறப்பாக ஆடினர். இந்நிலையில் சதத்தை நெருங்கிய டெண்டுல்கர் 91 ஓட்டங்களில் ஆட்டமிழந்தார்.

தொடர்ந்து ரோஹித்சர்மா 2 ஓட்டங்களில் ஆட்டமிழந்தார். பின்னர் இந்திய அணி அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்தது. தோனி 36 ஓட்டங்களை எடுத்தார். இதனால் இந்திய அணியின் ஓட்டம் குவிக்கும் வேகம் தடைப்பட்டது. இறுதியில் இந்தியா 50 ஓவர்களில் 9 விக்கெட் இழப்பிற்கு 258 ஓட்டங்கள் எடுத்து அவுஸ்திரேலியா வெற்றிபெற 259 ஓட்டங்கள் இலக்கு நிர்ணயிக்கப்பட்டது.

பந்துவீச்சில் நதன் பிராக்கன்-3, மைக்கல் கிளார்க் -3, சைமன்ட்ஸ், ஸ்ருவேர்ட் கிளார்க், பிரட்லி தலா ஒரு விக்கெட்டைக் கைப்பற்றினர்.

பின்னர் ஆடத் தொடங்கிய அவுஸ்திரேலியா முதல் 3 விக்கெட்டுகளையும் ஆரம்பத்திலேயே இழந்தது. 32 ஓட்டங்களுக்குள் இந்த 3 விக்கெட்டும் வீழ்த்தப்பட்டதால் அவுஸ்திரேலிய அணி தடுமாறியது.

பின்னர் ஹைடன் மற்றும் சைமன்ஸ் சிறப்பாக ஆடினர். இந்த நிலையில் ஹைடன் 55 ஓட்டங்களில் ரன் அவுட்டானார். இவரைத் தொடர்ந்து சைமன்ஸ் 42 ஓட்டங்களில் ஆட்டமிழந்தார். இதனால் அவுஸ்திரேலியா பெரும் பின்னடைவைச் சந்தித்தது. அதன்பின் ஹோப்ஸ் மற்றும் ஹசி ஜோடி சேர்ந்து ஆடினர். இருவரும் அவுஸ்திரேலியாவை வெற்றி இலக்கை நோக்கி அழைத்துச் சென்றனர்.

அப்போது ஹசி 44 ஓட்டங்களில் ஆட்டமிழந்தார். இதனால், ஆட்டம் பரபரப்பான கட்டத்திற்குச் சென்றது. இறுதியில் அவுஸ்திரேலியா 49.4 ஓவர்களில் 249 ஓட்டங்களுக்கு சகல விக்கெட்டுகளையும் இழந்தது.

64 ஓட்டம் எடுத்த ஹோப்ஸ் கடைசியில் ஆட்டமிழந்தார். இதன்மூலம் இந்தியா 9 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றது.

மூன்று போட்டிகளைக்கொண்ட இறுதிச் சுற்றில் இந்தியா முதல் இரண்டு போட்டிகளிலும் வென்றதன் மூலம் சாம்பியன் கிண்ணத்தை கைப்பற்றியுள்ளது. உலக சாம்பியன் அவுஸ்திரேலியாவை அதன் சொந்த மண்ணிலேயே இந்தியா வீழ்த்தி சாதனை படைத்திருக்கின்றது.

ஆட்ட நாயகனாக இந்தியாவின் பிரவீன் குமாரும் ஆட்டத்தொடர் நாயகனாக அவுஸ்திரேலியாவின் நாதன் பிராக்கனும் தெரிவுசெய்யப்பட்டனர்.

இந்த முக்கோணத் தொடரில் மூன்றாவது அணியாக இலங்கை பங்குபற்றியதும் குறிப்பிடத்தக்கது.

Email this page Your Opinion Print this page
அநுராவுக்கு கடும் சுகவீனம்
13 ஆவது திருத்தத்தை அமுல்படுத்த ஜனாதிபதி ஜே.வி.பி. யுடன் பேசுவார்
சுகவீன விடுமுறைப் போராட்டம் நடத்தும் ஆசிரியர்களை சாடுகிறார் பிரதம நீதியரசர்
பெரியமடுவில் உழவு இயந்திரத்தில் சென்ற 4 பொதுமக்கள் கிளைமோர் தாக்குதலில் பலி
கிளைமோர்கள், வெடிபொருட்கள் கற்பிட்டி நரக்கள்ளி பகுதியில் மீட்பு
அக்கரைப்பற்றில் வயற்பகுதியில் சூட்டுக்காயத்துடன் இளைஞன் சடலம்
கிழக்கு தேர்தல் தொடர்பான பவ்ரலின் அடிப்படை உரிமை மீறல் மனு நிராகரிப்பு
சமாதானத்தில் கொண்டிருக்கும் ஆர்வத்தை துணிவுடன் வெளிப்படுத்துமாறு அழைப்பு
சிவில் பாதுகாப்பு குழுக் கூட்டத்தில் தூங்கிய மாத்தறை பொலிஸ் அதிகாரிக்கு இடமாற்றம்
தம்புள்ள குண்டுவெடிப்பு சம்பவத்துடன் தொடர்புடைய சிங்களப் பெண்ணுக்கு விளக்கமறியல்
உள்ளூராட்சி தேர்தல் நீதியாக நடைபெறும் பவ்ரல் அமைப்பிடம் ஜனாதிபதி உறுதியளிப்பு
வெளிநாட்டு வேலைவாய்ப்பு மோசடி முகவருக்கு 8 வருட சிறைவாசம்
மனித உரிமை ஆணைக்குழுவில் தந்தையும் மகனும் சரண்
முக்கோணத் தொடரின் 2 ஆவது இறுதியாட்டத்திலும் வென்று சாம்பியன் கிண்ணத்தை இந்தியா கைப்பற்றியது
சிவராத்திரி தினமன்று மதுவிற்பனை நிலையங்களை மூடுவதற்கு நடவடிக்கையெடுக்குமாறு வேண்டுகோள்
சிவராத்திரி தினத்தில் ஊரடங்கு நீக்கம்
வடமேல் மாகாணசபை, புத்தளம் நகரசபை உறுப்பினர்களின் வாகனம் ,வீடு மீது தாக்குதல்
வவுனியாவில் கடத்தப்பட்ட 5 பேர் விடுவிப்பு உறவினர்கள் நீதிபதியிடம் தெரிவிப்பு
சிறுவர் துஷ்பிரயோகம், கலாசார சீரழிவு குடாநாட்டில் மோசமாக அதிகரிப்பு
அரசின் கட்டுப்பாட்டிலுள்ள பகுதியிலிருந்து ஆட்கள் காணாமல்போவதற்கு அரசே காரணம்
கூட்டமைப்பு எம்.பி.க்கள் கொழும்பு வரும்போது பலத்த கெடுபிடிகள்
ஹல்தும்முல்லையில் பஸ்-லொறி விபத்து பாடசாலை மாணவர் உட்பட 34 பேர் காயம்
யாழ்.- கொழும்பு நோயாளர் விமான சேவையை மீண்டும் திங்கள் முதல் ஐ.சி.ஆர்.சி. ஆரம்பித்தது
அரசியலமைப்பு பேரவை உறுப்பினர் நியமனம் தொடர்பான அரசின் அறிவிப்புக்கு ஐ.தே.க., ஜே.வி.பி.கடும் எதிர்ப்பு
வெளிநாட்டு இராணுவத்தலையீடுகள் வருமெனில் அதனை முறியடிக்க ஒருபோதும் தயங்க மாட்டோம்
ஆட்டை மோதிய இ.போ.ச. பஸ் சாரதி தங்க மோதிரத்தை கழற்றிக் கொடுத்தார்
மாணவர்களின் வீதிமறியல் போராட்டம் அதிபர், உப அதிபரை நீதிமன்றம் எச்சரித்து விடுதலை
வட,கிழக்கு மக்கள் சகல உரிமைகளுடனும் வாழக்கூடிய சூழலை ஏற்படுத்துவது அவசியம்
`வாக்காளர் பதிவு தொடர்பில் அனைவரும் அக்கறையுடன் செயற்பட வேண்டும்'
இ.தொ.ஐ.மு.வின் மனித உரிமை தொடர்பாக தாக்கல் செய்யப்பட்ட மனு விசாரணைக்கு ஏற்றுக் கொள்ளப்பட்டமை வரவேற்கத்தக்கது
அவுஸ்திரேலிய சுற்றுப் பயணம் எனது வாழ்க்கையில் திருப்புமுனை
 
 
 
   
 
 
   
Home - Important News - Foreign News - Sports News - Sinhala News - Articles - Editorial - DR - Cartoon - Archives - Obituaries
© 2008. All Rights Reserved. Thinakkural.com / Thinakural.com - Site By Evosof.com