உயிர் அச்சுறுத்தல் காரணமாக இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் யாழ். அலுவலகத்தில் நேற்று செவ்வாய்க்கிழமை இருவர் சரணடைந்துள்ளனர்.
நுணாவில் சாவகச்சேரியைச் சேர்ந்த 55 வயதுடைய தந்தையும் 20 வயதுடைய மகனுமே சரணடைந்தவர்களாவர். தந்தை கடை உரிமையாளரென்பதும் மகன் மாணவரென்பதும் குறிப்பிடத்தக்கது.
இவர்களை நீதிமன்றப் பாதுகாப்பில் வைப்பதற்குரிய நடவடிக்கைகளை மனித உரிமை ஆணைக்குழு அதிகாரிகள் மேற்கொண்டுள்ளனர்.