பாராளுமன்றம் அநுரா பண்டாரநாயக்க எம்.பி.க்கு 3 மாதகால விடுமுறை வழங்கியுள்ளது.
பாராளுமன்றத்தில் நேற்று செவ்வாய்க்கிழமை அமைச்சர் லஸந்த அழகியவன்ன அநுரா பண்டாரநாயக்க சுகவீனமுற்றிருப்பதால் அவருக்குச் சபை 3 மாதகால விடுமுறை வழங்க வேண்டுமென பிரேரணையொன்றை முன் மொழிந்தார்.
இதனை எதிர்க்கட்சிப் பிரதம கொரடா ஜோஸப் மைக்கல் பெரேரா வழிமொழிந்ததையடுத்து அநுரா பண்டாரநாயக்க எம்.பி.க்கு 3 மாதகால விடுமுறை வழங்கப்பட்டது.
கடந்த வரவு -செலவுத் திட்ட வாக்களிப்பில் எதிரணிப் பக்கம் தாவிய அநுரா பண்டாரநாயக்க எம்.பி. அதன் பின்னர் இதுவரை சபைக்கு வருகை தரவில்லை.
ஈரல் புற்று நோயினால் பாதிக்கப்பட்டு தற்போது தனியார் வைத்தியசாலையொன்றில் அதிதீவிர சிகிச்சைப் பிரிவில் அநுரா பண்டாரநாயக்க சிகிச்சை பெற்று வருவதும் இங்கு குறிப்பிடத்தக்கது.