ஜெனீவாவில் நடைபெற்று வரும் ஐ.நா.வின் மனித உரிமைகள் பேரவையின் 7 ஆவது அமர்வில் கலந்துகொள்ளும் இலங்கை தூதுக்குழுவுக்கு தலைமை தாங்கிச் சென்றுள்ள இடர் முகாமைத்துவ மனித உரிமைகள் பற்றிய அமைச்சர் மஹிந்த சமரசிங்க, கொலம்பியாவின் உதவி ஜனாதிபதி பிரான்சிஸ்கோ சென்ட்டோஸ் கல்டேரோவை சந்தித்துப் பேசுவதையும் அருகில் ஜெனீவாவுக்கான இலங்கையின் வதிவிடப் பிரதிநிதியான தயான் ஜயதிலகவையும் இங்கு காணலாம்.
கொழும்பு தமிழ்ச் சங்கத்தில் நேற்று முன்தினம் திங்கட்கிழமை மாலை இடம்பெற்ற கலாநிதி குமார் ரூபசிங்கவின் `சமாதானத்திற்கான குரல்' நூல் வெளியீட்டு விழாவின்போது, நிகழ்வில் உச்ச நீதிமன்ற ஓய்வுபெற்ற நீதியரசர் சி.வி.விக்னேஸ்வரன், தென்னிந்தியத் திருச்சபை இளைப்பாறிய ஆயர் ஜெபநேசன் அடிகளார், கலாநிதி குமார் ரூபசிங்க, பேராசிரியர் என்.பாலகிருஷ்ணன் ஆகியோர் மேடையில் அமர்ந்திருப்பதையும் சகவாழ்வு மன்றத்தின் ஊடக, பொதுவிவகார ஆலோசகர் சுவர்ணா மல்லவராச்சி தினக்குரல் ஸ்தாபகர் எஸ்.பி.சாமிக்கு நூல் பிரதியை வழங்குவதையும் கலாநிதி ரூபசிங்க உரையாற்றுவதையும் நிகழ்வில் கலந்துகொடோரில் ஒருபகுதியினரையும் இங்கு காண்கிறீர்கள்.
புதிய நுகர்வோர் நீதிமன்றம் ஒன்றினை நேற்று செவ்வாய்க்கிழமை நீதிவான் நீதிமன்ற வளாகத்தில் பிரதம நீதியரசர் சரத் என். சில்வா திறந்துவைப்பதையும் நுகர்வோர் அமைச்சர் பந்துல குணவர்த்தன மற்றும் பிரமுகர்களையும் காணலாம்.
மாகாண ஆளுநர்கள், முதலமைச்சர்களை ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ சந்தித்து பேச்சுவார்த்தை நடத்துவதை இங்கு காணலாம்.