டுபாயில் நடைபெற்று வரும் ஏ.டி.பி டெனிஸ் போட்டியில் உலகின் முதல் நிலை டெனிஸ் வீரரான ரோஜர் பெடரர் பிரிட்டனின் ஆண்டி முர்ரேயிடம் முதல் சுற்று ஆட்டத்திலேயே அதிர்ச்சித் தோல்வியடைந்துள்ளார்.
இந்தப் போட்டியில் முர்ரே 6/7, 6/3, 6/5 என்ற செற் கணக்கில் பெடரரை வீழ்த்தி அடுத்த சுற்றுக்கு முன்னேறியுள்ளார்.
மூன்றரை ஆண்டுகளுக்குப் பின் ரோஜர் பெடரர் முதல் சுற்று ஆட்டத்திலேயே தோல்வியடைந்து வெளியேறியிருப்பது குறிப்பிடத்தக்கது.
இந்த ஆண்டின் தொடக்கத்தில் நடைபெற்ற அவுஸ்திரேலிய ஓப்பன் டெனிஸ் போட்டியிலும் ரோஜர் பெடரர் அரையிறுதிச் சுற்றில் சேர்பியாவின் நோவா ஜோக்கோவிக்கிடம் தோல்வியடைந்தது குறிப்பிடத்தக்கது.
கடந்த 19 மாதங்களுக்கு முன் சின்சினாட்டி போட்டியிலும் முர்ரேயிடம் பெடரர் தோல்வியடைந்தார். நேற்று முன்தினம் நடந்த போட்டி கடுமையானதாக இருந்ததென்றும் இரண்டு முன்னணி வீரர்களில் யாரேனும் ஒருவர் தோல்வியைத் தழுவித்தானாக வேண்டுமென்றும் பெரடர் கூறியுள்ளார்.