Thinakkural Tamil News Paper - The Independent Voice in Tamil

The Independent Voice in Tamil
Wednesday, March 05, 2008


Download latha tamil font
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
  Sri Lanka Forecast
 
 
 
 
 
 
 
HOT NEWS
Sports news
ஐ.சி.எல்.அணிகளுக்கு வெளிநாட்டவர்கள் கப்டன்கள் பாகிஸ்தானிலிருந்து லாகூர் பாட்ஷாவும் வருகிறது
[05 - March - 2008] [Font Size - A - A - A]
இந்திய கிரிக்கெட் (ஐ.சி.எல்) நடத்தும் `ருவென்ரி- 20' சம்பியன்சிப் போட்டி 09 ஆம் திகதி தொடங்குகிறது.

கபில்தேவ் தலைமையிலான ஐ.சி.எல்.அமைப்பு சார்பில் ஏற்கனவே 20 ஓவர் மற்றும் 50 ஓவர் போட்டி நடத்தப்பட்டது. இந்த நிலையில் ஐ.சி.எல் சார்பில் 20 ஓவர் கிராண்ட் சம்பியன் சிப் போட்டி நடத்தப்படுகிறது.

எதிர்வரும் 9 ஆம் திகதி முதல் ஏப்ரல் 7 ஆம் திகதி வரை நடைபெறும் இந்தப் போட்டி ஐதராபாத், சண்டிகர், டெல்லி ஆகிய இடங்களில் நடக்கிறது.

இந்தப் போட்டியில் சென்னை சுப்ப ஸ்டார்ஸ் , மும்பை சாம்ப்ஸ் உட்பட 8 அணிகள் கலந்து கொண்டு மோதுகின்றன. பாகிஸ்தானிலிருந்து லாகூர் பாட்ஷா என்ற அணி பங்கேற்கிறது.

ஒவ்வொரு அணியும் மற்ற அணியுடன் தலா ஒருமுறை லீக் ஆட்டத்தில் மோதும் . லீக் போட்டி முடிவில் முதல் 2 இடங்களைப் பிடிக்கும் அணிகள் அரையிறுதிக்குத் தகுதி பெறும். மொத்தம் 34 போட்டிகள் நடைபெறும். ஜீஸ்போர்ட்ஸ் மற்றும் டென் ஸ்போர்ட்ஸ் தொலைக்காட்சிகளில் நேரடியாக ஒளிபரப்பு செய்யப்படுகிறது.

இந்தப் போட்டிக்கான 8 அணிகளின் கப்டன்கள் அறிவிக்கப்பட்டுள்ளனர். மும்பை சாம்ப்ஸ் அணிக்கு லாராவும், சென்னை சுப்ப ஸ்டார்ஸ் அணிக்கு ஸ்ருவேர்ட்லோவும் , கொல்கத்தா டைகர்ஸ் அணிக்கு கிரேக் மக்மிலனும், ஐதராபாத் ஹீரோஸ் அணிக்கு கிறிஸ் ஹரிஸும், டெல்லி ஜியன்ட்ஸ் அணிக்கு அத்தப்பத்துவும், சண்டிகர் லயன்ஸ் அணிக்கு கெய்ன்ஸும் அகமதாபாத் ரொக்கெட்ஸ் அணிக்கு டாமியன் மார்டினும், லாகூர் பாட்ஷாஸ் அணிக்கு இன்சமாமும் கப்டனாக நியமிக்கப்பட்டுள்ளனர்.

Email this page Your Opinion Print this page
ஐ.சி.எல்.அணிகளுக்கு வெளிநாட்டவர்கள் கப்டன்கள் பாகிஸ்தானிலிருந்து லாகூர் பாட்ஷாவும் வருகிறது
டுபாய் ஏ.டி.பி. டெனிஸ் போட்டியில் முதல் சுற்றிலேயே பெடரர் தோல்வி
பெங்களூர் ஓப்பன் டெனிஸ் ஆரம்பம் முதல் சுற்றுக்கு ஜப்பான் வீராங்கனை தகுதி
தென்னாபிரிக்காவுடனான தொடர் 9ஆம் திகதி இந்திய அணி தேர்வு
வீரர்கள் ஏலம் விடப்பட்டதால் இந்திய மாநிலங்களவையில் மோதல் நிலை
`பாகிஸ்தான் கிரிக்கெட் சபைக்கு இந்தியா ஒருபோதும் உதவியதில்லை'
உலகக் கிண்ணத்தை கைப்பற்றிய இந்திய ஜூனியர் அணிக்கு பெரும் வரவேற்பு
 
 
 
   
 
 
   
Home - Important News - Foreign News - Sports News - Sinhala News - Articles - Editorial - DR - Cartoon - Archives - Obituaries
© 2008. All Rights Reserved. Thinakkural.com / Thinakural.com - Site By Evosof.com