Thinakkural Tamil News Paper - The Independent Voice in Tamil

The Independent Voice in Tamil
Thursday, March 06, 2008


Download latha tamil font
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
  Sri Lanka Forecast
 
 
 
 
 
 
 
HOT NEWS
Foreign News
எதிர்க்கட்சிகளிடையிலான இணக்கப்பாட்டின் பின் கென்யாவிலிருந்து விடைபெற்றார் கொபி அனான்
[06 - March - 2008] [Font Size - A - A - A]
கென்யாவில் நடைபெற்ற வன்முறைகளை முடிவுக்கு கொண்டுவந்து அந்நாட்டின் பிரதான இரு எதிர்க்கட்சிகளிடையே அதிகாரப் பகிர்வு உடன்படிக்கை கைச்சாத்திட்ட பின்னர் அங்கிருந்து வெளியேறியுள்ளார். ஐக்கிய நாடுகள் சபையின் முன்னாள் செயலர் கொபி அனான்.

கென்யாவில் ஜனாதிபதித் தேர்தல் முடிவுகள் வெளியானதைத் தொடர்ந்து தேர்தலில் மோசடி இடம்பெற்றுள்ளதாகக் கூறி றைலா ஒடிங்காவைத் தலைவராகக் கொண்ட எதிர்க்கட்சியினருக்கும் ஜனாதிபதி வாய் கிபாகி கட்சிக்கும் இடையில் மோதல்கள் இடம்பெற்றதுடன் நாடளாவிய ரீதியில் வன்முறைச் சம்பவங்களும் இடம்பெற்றன.

இந்நிலையில் இருதரப்பினரிடையேயும் இணக்கப்பாட்டை ஏற்படுத்தி நாட்டில் அமைதியை ஏற்படுத்தும் நோக்குடன் மத்தியஸ்தக் கடமைகளில் ஈடுபட்டிருந்தார் கொபி அனான்.

இவ்விடயம் தொடர்பில் கொபி அனான் கருத்துத் தெரிவிக்கையில்;

ஸ்திரமானதும் சமாதானமானதும் செழுமையானதுமான நாடாக கென்யா வரவேண்டுமென்பதே சர்வதேசத்தினதும் விருப்பம்.

அவ்வாறானதொரு கென்யாவை கட்டியெழுப்புவதில் அனைத்து கென்ய மக்களும் தமது பங்களிப்பினை வழங்க வேண்டும்.

அத்துடன், நாட்டின் நல்லிணக்கம் ஒன்றை ஏற்படுத்துவது அரசியல்வாதிகளின் கடமை மட்டுமல்ல நாட்டு மக்களினதும் கடமையாகும்.

மேலும், இவ்வாறான கென்யாவைக் கட்டியெழுப்புவதற்கு அனைத்து கென்ய மக்களையும் நான் வலியுறுத்துகின்றேன் எனத் தெரிவித்தார்.

கென்யாவிலிருந்து தற்போது உகண்டாவிற்குச் சென்றுள்ள கொபி அனான் அங்கிருந்து சுவிற்சர்லாந்து செல்வாரென தெரிவிக்கப்பட்டுள்ளது.

Email this page Your Opinion Print this page
பிரிட்டனிடமிருந்து சுதந்திரம் பெற போராட்டம் ஸ்கொட்லாந்து பிரதமர் சால்மோன்ட் அறிவிப்பு
எதிர்க்கட்சிகளிடையிலான இணக்கப்பாட்டின் பின் கென்யாவிலிருந்து விடைபெற்றார் கொபி அனான்
இந்திய வாடகைத் தாய்களை நாடும் அமெரிக்கத் தம்பதிகளின் எண்ணிக்கை அதிகரிப்பு
மலேசியாவில் இந்திய வம்சாவளியினரை மிரட்டும் வகையில் ஆளும் கட்சி விளம்பரம்
 
 
 
   
 
 
   
Home - Important News - Foreign News - Sports News - Sinhala News - Articles - Editorial - DR - Cartoon - Archives - Obituaries
© 2008. All Rights Reserved. Thinakkural.com / Thinakural.com - Site By Evosof.com