Thinakkural Tamil News Paper - The Independent Voice in Tamil

The Independent Voice in Tamil
Thursday, March 06, 2008


Download latha tamil font
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
  Sri Lanka Forecast
 
 
 
 
 
 
 
HOT NEWS
Important News
சகல பதிவுகளுடனும் தங்கியிருந்த தமிழ் இளைஞர் பொலிஸாரால் கைதாகி பூசாவில் தடுத்து வைப்பு
[06 - March - 2008] [Font Size - A - A - A]
* பிரதியமைச்சர் இராதாகிருஷ்ணனிடம் முறையீடு

கடவூச்சீட்டு தொட்பாக கைது செய்யப்பட்டு வழக்கு தொடரப்பட்டிருந்த இளைஞர் ஒருவரை வழக்கு விசாரணைக்காக கொழும்பில் சகல பதிவுகளுடனும் தங்கியிருந்த போதும் கொட்டாஞ்சேனைப் பொலிஸார் கைது செய்து தற்போது பூசா முகாமில் தடுத்து வைத்துள்ளதாக தாயார் மலையக மக்கள் முன்னணியின் பாராளுமன்ற உறுப்பினரும் வாழ்க்கைத் தொழில் தொழில்நுட்ப் பயிற்சி பிரதி அமைச்சருமான பெ.இராதாகிருஷ்ணனிடம் புகார் செய்துள்ளார்.

ஊரெழு கிழக்கைச் சேர்ந்த ராஜசிங்கம் ஈஸ்வரன் (வயது 28) என்பவரே கொட்டாஞ்சேனை கைராஸ் லொட்ஜில் வைத்து கைது செய்யப்பட்டு 9 நாட்களுக்கு பிறகு பூசா முகாமில் தடுத்து வைக்கப்பட்டுள்ளார்.

கடந்த வருடம் நவம்பர் மாதம் 15 ஆம் திகதி கொட்டாஞ்சேனை பொலிஸ் நிலையத்தைச் சேர்ந்த அத்துல என்ற கான்ஸ்டபிலினால் கைது செய்யப்பட்டு பின்னர் அவரை பூசா முகாமில் தடுத்து வைத்திருப்பதாகவும் தாயாரான ராஜசிங்கம் கமலாவதி முறையிட்டுள்ளார்.

2006 ஆம் ஆண்டு கொட்டாஞ்சேனையில் தனது நண்பர் ஒருவரின் கடவுச்சீட்டை போட்டோ பிரதி செய்து எடுத்துக் கொண்டு வரும் போது கொட்டாஞ்சேனைப் பொலிஸார் கைது செய்து வழக்குத் தாக்கல் செய்துள்ளதாகவும் வழக்கை முடித்துக் கொண்டு மத்திய கிழக்கு நாட்டுக்குச் செல்ல காத்திருந்ததாகவும் தனது வழக்கு தொடர்பான சகல விபரங்கள், ஆவணங்கள் வழக்குத் தாக்கல் செய்யப்பட்ட பொலிஸ் விசாரணை நடைபெறும் நீதிமன்றம் உட்பட அனைத்து விபரங்களையும் கொட்டாஞ்சேனை பொலிஸ் நிலையத்தின் விசாரணை அதிகாரிக்கு வழங்கிய போதும் அவர்கள் எதுவிதமான பதிலும் கூறாமல் காரணமின்றி தனது மகனை பூசாவில் தடுத்து வைத்திருப்பதாகவும் தெரிவித்தனர்.

வெளிநாடு செல்வதற்காக தமிழ் முகவரான பெண் ஒவரிடம் கடவுச்சீட்டு, பணத்தை பறிகொடுத்துள்ள தனது மகனை விடுவித்துத் தருமாறு தாயாரான கமலாவதி பிரதி அமைச்சரை சந்தித்து துயரத்துடன் தெரிவித்தார்.

இவ்விடயம் தொடர்பாக பயங்கரவாத தடுப்புப் பிரிவு இயக்குனர் நந்தன முனசிங்கவுடன் தொடர்பு கொண்ட பிரதியமைச்சர் ஈஸ்வரனுக்கு ஏற்பட்டுள்ள நிலைமைகளை விளக்கியுள்ளார்.

இதேவேளை, பூசா முகாமில் நீண்ட காலமாக தடுத்து வைக்கப்பட்டிருந்த ராஜேந்திரன் கமலகண்ணன், கமலகண்ணன் கார்த்திகா, லாசாஸ் சாமுவேல் ஆகியோர் விடுதலை செய்யப்பட்டுள்ளதாகவும் பயங்கரவாதத் தடுப்புப் பிரிவு இயக்குனர் பிரதி அமைச்சரிடம் தெரிவித்துள்ளார்.

அத்தோடு, கடந்த மாதம் 14 ஆம் திகதி மாளிகாவத்தை கிண்ணியா லொட்ஜிலிருந்து கடத்திச் செல்லப்பட்டு சித்திரவதைக்குள்ளாக்கப்பட்டு கொழும்புக்கு வரக்கூடாது என்று எச்சரிக்கப்பட்டு கடவத்தையில் கைவிடப்பட்ட இளைஞரான கல்முனையைப் பிறப்பிடமாகக் கொண்ட சீனித்தம்பி சுபாஷனை கம்பஹா நீதிமன்றத்திலிருந்து அழைத்து வந்த பிரதி அமைச்சர் பெ. இராதாகிருஷ்ணன் கடும் தாக்குதலுக்கும் சூட்டுக்காயங்களுக்கும் உள்ளான அவருக்கு மருத்துவ வசதிகளுக்கு ஏற்பாடு செய்து தங்குவதற்கு இடமளித்து தற்போது சொந்த ஊருக்கு அனுப்பி வைத்துள்ளார்.

தான் மத்திய கிழக்கு நாட்டுக்கு போவதற்காக ஒரு இலட்சத்து 40 ஆயிரம் ரூபாவை சாய்ந்த மருதைச் சேர்ந்தமுகவருக்கு வழங்கியதாகவும் வெளிநாடு செல்வதற்காக கிண்ணியா லொட்ஜில் தங்கியிருந்த போது கஜன் என்பவருடன் தான் கடத்தப்பட்டதாகவும் தன்னை தாக்கி மின்சாரக்கம்பிகளால் சுட்டு இம்சித்தவர்கள் தமிழ், சிங்களம் இரண்டையும் சரளமாக பேசியதாகவும் பிரதி அமைச்சரிடம் தெரிவித்துள்ளார்.

தனது இரண்டு சகோதரிகளையும் தாயையும் சுனாமிக்குப் பலிகொடுத்ததில் ஏற்பட்ட விரக்தியிலேயே உதவிகள் எதுவுமே கிடைக்காத நிலையில் அரபு நாட்டுக்கு செல்வதற்கு பணம் செலுத்தியதாகவும் தெரிவித்த சுபாஷன், சுனாமியால் பாதிக்கப்பட்ட போதும் இதுவரை 45 ஆயிரம் ரூபா மட்டுமே தங்களுக்கு வழங்கப்பட்டுள்ளதாகவும் சகல வழிகளிலும் தாங்கள் புறக்கணிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.

சுபாஷன் தனது மனைவி பரிமலர், தந்தை சீனித்தம்பியுடன் பாதுகாப்பாக புகையிரதத்தில் அனுப்பி வைக்கப்பட்டுள்ளார். பிரதி அமைச்சர் இவ்விடயம் தொடர்பாக இரகசிய பொலிஸாரிடமும் ஜனாதிபதி உட்பட பாதுகாப்பு உயர் அதிகாரிகளின் கவனத்திற்கு சுபாஷனுக்கு ஏற்பட்ட அனுபவத்தை தெரிவிப்பதற்கான ஏற்பாடுகளை செய்துள்ளார்.

Email this page Your Opinion Print this page
ஆயுதக் குழுக்களின் இடையூறில்லாத சூழலுக்கு பவ்ரல் வலியுறுத்தல்
முன்னாள் பிரதியமைச்சரை காணவில்லையென முறைப்பாடு
திருக்கேதீஸ்வரத்தில் இன்று இரவு வழிபாட்டில் கலந்துகொள்ள 300 பக்தர்களுக்கே அனுமதி
எழுவன்குளம் படைமுகாம் மீது விடுதலைப் புலிகள் தாக்குதல்
வட, கிழக்கு இந்து பக்தர்கள் இம்முறை சுதந்திரமாக அனுஷ்டிக்க வாய்ப்பு
இக்கட்டான சூழ்நிலையிலிருந்தும் விடுபட அனைவரும் பிரார்த்திப்போம்மகா
தவசிக்குளம் ஐவர் கொலை வழக்கு 6 இராணுவத்தினர் கைதாகி காவலில்
நாகர்கோவில் பகுதியில் பரஸ்பரம் கடும் ஷெல் வீச்சு
மடுக்கந்தையில் கிளைமோர் தாக்குதல்; 2 பொலிஸார் காயம்
காந்தக் குண்டுகளைப் பயன்படுத்தி தலைநகரில் தாக்குதல் நடத்த விடுதலைப்புலிகள் திட்டம்
ரூபவாஹினி நூலக உதவிப் பணிப்பாளர் கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு காயம்
104 படையினர், 80 பொதுமக்கள் ஒருமாதத்தில் பலி; 1021 பேர் காயம்
வாழைச்சேனையில் வெள்ளை வானில் வந்த ஆயுதபாணிகளால் இரு மாணவிகள் கடத்தல்
ஆனந்தசங்கரி, டக்ளஸ், சித்தார்த்தனுக்கு முதலமைச்சர் பதவியை வழங்குவது மற்றொரு பிரிவினைக்கு வழிவகுக்கும்
`உள்ளூராட்சி சபை தேர்தலின்போது மக்கள் சிந்தித்து வாக்களிக்க வேண்டும்'
சிறிலங்கன் எயார் லைன்ஸுடன் ஒப்பந்தம் முடிவடையும் விமானிகளுக்கு இந்திய விமான சேவைகளில் வேலை
மட்டக்களப்பு உள்ளூராட்சி சபைத்தேர்தலில் 5 ஆயிரம் பொலிஸார் பாதுகாப்பு கடமையில்
சந்தேகத்தின் பேரில் கைதான குடும்பஸ்தர் பொலிஸ் நிலையத்தில் விசாரணை
தமிழ் கூட்டமைப்பு எம்.பி.க்களின் வன்னிப் பயணத்தை தடுப்பதன் மூலம் படுகொலைகளை மூடி மறைக்க முயற்சி
ஈழத்தமிழரை படுகொலை செய்யும் இலங்கை இராணுவத்தின் தளபதியை இந்தியா அழைப்பதா?
விமான மூலம் போதைவஸ்து கடத்தி வந்த இந்திய பிரஜைக்கு ஆயுட்கால சிறை
தேர்தலுக்காக ஆயுதக் குழுவுடன் அரசு ஒப்பந்தம் செய்திருப்பது இலங்கைக்கு அவமதிப்பு
கச்சதீவில் துப்பாக்கி சூடு தமிழக மீனவர் பலி
கிழக்கு மாகாண பொலிஸ் நிலையங்களில் 175 தமிழ் பொலிஸார் நியமனம்
அவசர கால நீடிப்புக்கு 88 மேலதிக வாக்குகள்
முகத்துவாரம் குண்டுவெடிப்பு இரு ஆட்டோ சாரதிகள் கைது
விமான மூலம் போதைவஸ்து கடத்தி வந்த இந்திய பிரஜைக்கு ஆயுட்கால சிறை
அராலியில் இரு ஆலயங்களில் கொள்ளை சந்தேகத்தின் பேரில் நான்கு பேர் கைது
ரயில் மோதி யுவதி பலி மற்றொருவர் படுகாயம்
3 எம்.பி.க்களுக்கு 3 மாத கால விடுமுறை
யாழ். குடாநாட்டில் கோதுமைச் செய்கை
தேசிய கொள்கையை உருவாக்கப் போவதாக ஐ.தே.க., சு.க. மக்கள் பிரிவு இணைந்து அறிவிப்பு
புலம்பெயர்ந்த இந்திய வம்சாவளி பிள்ளைகளுக்கான புலமைப் பரிசில்
டஸ்கர் பொட்லிங் முகாமைத்துவ நிறுவனத்திற்கு எதிராக தோட்டத் தொழிலாளர்கள் வேலைநிறுத்தம்
புலிகளின் இரு சடலங்கள் வன்னிக்கு அனுப்பி வைப்பு
வவுனியாவில் கிளைமோரில் காயமடைந்தவர் உயிரிழப்பு
ஊடகவியலாளரின் வீட்டிற்குள் நுழைந்து தாக்குதல் முஸ்லிம் மீடியாபோரம் கடும் கண்டனம்
ஊடகவியலாளர் தாக்கப்பட்டதை கண்டித்து பிக்குவுக்கு எதிராக மாத்தறையில் ஆர்ப்பாட்டம்
அனைத்து கட்சி மாநாட்டில் அங்கத்துவம் வழங்குமாறு அகில இலங்கை தமிழர் கூட்டணி கோரிக்கை
பாலியல் குற்றச்சாட்டில் திருப்பியனுப்பப்பட்ட 108 இராணுவத்தினருக்கு சம்பளம் வழங்கப்படவில்லை
பாராளுமன்ற முன்னாள் செயலாளர் நாயகம் இரு ஓய்வூதியம் பெறுவது தொடர்பாக விசாரணை
தேங்காய், முட்டை விலை அதிகரிப்புக்கும் உலக சந்தை நிலைவரமா காரணம்?
மின்கட்டணம் அதிகரிக்கப்பட்டால் பொதுமக்கள் மிகமோசமான பொருளாதார சுமையை எதிர்கொள்வார்கள்
`இந்து ஆலய நிர்வாக கட்டமைப்பில் பெண்களின் பிரதிநிதித்துவம் உறுதிப்படுத்தப்படுவது வரவேற்கத்தக்கது'
சகல பதிவுகளுடனும் தங்கியிருந்த தமிழ் இளைஞர் பொலிஸாரால் கைதாகி பூசாவில் தடுத்து வைப்பு
 
 
 
   
 
 
   
Home - Important News - Foreign News - Sports News - Sinhala News - Articles - Editorial - DR - Cartoon - Archives - Obituaries
© 2008. All Rights Reserved. Thinakkural.com / Thinakural.com - Site By Evosof.com