Thinakkural Tamil News Paper - The Independent Voice in Tamil

The Independent Voice in Tamil
Thursday, March 06, 2008


Download latha tamil font
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
  Sri Lanka Forecast
 
 
 
 
 
 
 
HOT NEWS
Important News
மின்கட்டணம் அதிகரிக்கப்பட்டால் பொதுமக்கள் மிகமோசமான பொருளாதார சுமையை எதிர்கொள்வார்கள்
[06 - March - 2008] [Font Size - A - A - A]
* சபையில் ஜோசப் மைக்கல் பெரேரா

பொருட்களின் விலைகள் அதிகரித்துள்ள நிலையில் மின் கட்டணம் அதிகரிக்கப்பட்டால் மக்களுக்கு மேலும் சுமையைக் கொடுக்குமென எதிர்க்கட்சி பிரதம கொரடா ஜோசப் மைக்கல் பெரேரா தெரிவித்துள்ளதுடன், சிறிய தொழிற்துறைகள் மூடப்படும் நிலை உருவாகியுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.

பாராளுமன்றத்தில் கடந்த செவ்வாய்க்கிழமை மின் கட்டண அதிகரிப்புத் தொடர்பான சபை ஒத்திவைப்பு வேளை பிரேரணையில் கலந்து கொண்டு உரையாற்றுகையிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

நாடு முழுவதும் மின்கட்டண அதிகரிப்பு தொடர்பாக பேசுகின்ற நிலையில் அரசாங்கம் இதிலிருந்து நழுவப் பார்க்கின்றது. இது குறித்து பேசுகின்ற போது சபையில் அரச தரப்பைச் சேர்ந்தோர் எவரும் இருப்பதில்லை.

மின்கட்டண அதிகரிப்பானது பல்வேறு வகையில் தாக்கத்தைச் செலுத்தப் போகின்றது. சிறிய மற்றும் தொழில்துறைகளில் பாரிய தாக்கத்தை ஏற்படுத்தி உற்பத்திச் செலவை அதிகரித்து பொருட்களின் விலைகள் அதிகரிக்கக் காரணமாக அமையும்.

ஏற்கனவே மக்கள் பொருட்களின் விலை உயர்வினால் அல்லல்படுகின்ற நிலையில் இந்தக் கட்டண அதிகரிப்பு பனையால் விழுந்தவனை மாடு ஏறி மிதித்த கதையாக முடியப் போகின்றது.

அதேநேரம் உற்பத்திச் செலவு அதிகரித்தால் ஊழியர்களின் எண்ணிக்கை தொழில் துறையில் வரையறுக்கப்பட்ட மற்றுமொரு வகையிலும் மக்கள் பாதிக்கப்படுவர். இது எண்ணெய் சட்டியிலிருந்து நெருப்பில் விழுந்த கதையாகவே முடியப் போகிறது.

மின்சார சபைக்கு எரிபொருட்களுக்கான மானியம் நீக்கப்படுவதே இந்த கட்டண அதிகரிப்புக்குக் காரணமென கூறப்படுகின்றது. ஆனால், மிகின் எயாருக்கு பெற்றோலிய கூட்டுத்தாபனம் மானிய அடிப்படையில் எரிபொருளை வழங்குகின்றது.

1987 இல் எமது ஆட்சிக்காலத்தில் மதவழிபாட்டுத் தலங்கள் பாடசாலைகளுக்கு இலவசமாக மின்சாரத்தை வழங்கினோம். அந்த மின் சாரவிளக்குகள் யாவும் அணைக்கப்பட்டு விட்டன.

சபையில் ஐ.தே.க.வே கேள்வியை எழுப்பி பதிலை அளிக்க வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. எமது கேள்விகளுக்கு பதிலளிப்பவர்கள் ஒருவரும் இன்று சபையில் இல்லை.

தற்போது தொழிற்துறைகள் மூடப்பட்டு வருகின்றன மின்கட்டணம் அதிகரிக்கப்படுமாயின் குறிப்பாக சிறிய தொழில் முயற்சிகள் உட்பட பல்வேறு தொழில் முயற்சிகள் பாதிக்கப்படும்.

சிறியளவிலான தொழில் முயற்சிகள் பாதிக்கப்பட்டால் பெருமளவிலானவர்கள் தொழில்களை இழக்கவேண்டிய நிலை ஏற்படும்.

எனவே, இந்த விடயம் மிக முக்கியமானது. வீட்டுப் பாவணையாளர்கள் 90 அலகுகளை விட ஒரு அலகுகூடுதலாக பயன்படுத்தினால் கூடுதலாக பாதிக்கப்படுவர்.

நீர்கொழும்பு பொஸ்கோ, கங்காராம தேவத்தை வசலிக்கா ஆகிய சமய அரச சார்பற்ற தொண்டு அமைப்புகள் தொழிற் பயிற்சிகளை வழங்கி வருகின்றன. இந்த மின் கட்டண அதிகரிப்பால் பாரிய சுமை அவர்களுக்கு ஏற்பட்டு அவற்றை மூட வேண்டிய நிலைமை ஏற்படப்போகின்றது.

கோப் அறிக்கையில் பெருமளவு ஊழல் மோசடிகள் மின்சார சபையில் இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆனால், மோசடியில் ஈடுபட்டவர்களை பாதுகாக்கும் வகையில் அரசாங்கம் செயற்படுகின்றது. எமது ஆட்சிக் காலத்தில் பெருமளவு பணத்தை மின்சாரசபை சேமித்திருந்தது தற்போது பணம் வீண்விரயம் செய்யப்படுகின்றது.

பால்மா, அரிசி, பருப்பு உட்பட அத்தியாவசியப் பொட்களின் விலையுயர்வால் மக்கள் அல்லல்படுகின்ற நிலையில் மின் கட்டணம் அதிகரிக்கப்பட்டால் பொதுமக்கள் மிக மோசமாக பாதிக்கப்படுவார்கள். பொருட்களின் விலையுயர்வுக்கு யுத்தத்தை காரணம் காட்டுகின்றனர். இந்த அரசாங்கம் பெரிய அமைச்சரவையைக் கொண்டுள்ள அதேசமயம் எத்தனை பேர் ஜனாதிபதி ஆலோசகராகவுள்ளனர். இதுவே பொருளாதார நெருக்கடிக்கு காரணமாகும்.

இது மக்கள் மீது தான் சுமையைச் செலுத்தும். மக்கள் வீதியில் இறங்க முடியாதளவுக்கு வலுவிழந்துள்ளனர் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

பியசீலி விஜயநாயக்க

ஜே.வி.பி.எம்.பி.பியசீலி விஜயநாயக்க பேசுகையில்;

மின்கட்டண அதிகரிப்புத் தொடர்பாக வர்த்தமாணி மூலம் மக்களிடம் கருத்துகள் கேட்கப்பட்டுள்ளது. இதன் படி ஒரு குறிப்பிட்ட காலத்துக்கே மின்கட்டண அதிகரிப்பு ஏற்படாது.

மின் உற்பத்திக்கு மானியம் வழங்குவதாக கூறி ஒரு லீறறர் பெற்றோலுக்கு 9 ரூபா மேலதிகமாக அதிகரிப்பதாக முன்னர் அரசு தெரிவித்த நிலையில் அதற்கு தற்போது என்ன நடைபெற்றுள்ளது.

இதனை அறவிட்டு இந்தியன் ஒயில் கம்பனிக்கு வழங்கப்படுகின்றது.

வீட்டில் ஒருவர் நோய்வாய்ப்பட்டால் இரவு முழுவதும் மின்சாரம் பாவிக்கப்பட்டு 90 அலகிலிருந்து 91 அலகாக உயர்ந்தால் இந்த கட்டண அதிகாரிப்புக்குட்படுவார்கள் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

Email this page Your Opinion Print this page
ஆயுதக் குழுக்களின் இடையூறில்லாத சூழலுக்கு பவ்ரல் வலியுறுத்தல்
முன்னாள் பிரதியமைச்சரை காணவில்லையென முறைப்பாடு
திருக்கேதீஸ்வரத்தில் இன்று இரவு வழிபாட்டில் கலந்துகொள்ள 300 பக்தர்களுக்கே அனுமதி
எழுவன்குளம் படைமுகாம் மீது விடுதலைப் புலிகள் தாக்குதல்
வட, கிழக்கு இந்து பக்தர்கள் இம்முறை சுதந்திரமாக அனுஷ்டிக்க வாய்ப்பு
இக்கட்டான சூழ்நிலையிலிருந்தும் விடுபட அனைவரும் பிரார்த்திப்போம்மகா
தவசிக்குளம் ஐவர் கொலை வழக்கு 6 இராணுவத்தினர் கைதாகி காவலில்
நாகர்கோவில் பகுதியில் பரஸ்பரம் கடும் ஷெல் வீச்சு
மடுக்கந்தையில் கிளைமோர் தாக்குதல்; 2 பொலிஸார் காயம்
காந்தக் குண்டுகளைப் பயன்படுத்தி தலைநகரில் தாக்குதல் நடத்த விடுதலைப்புலிகள் திட்டம்
ரூபவாஹினி நூலக உதவிப் பணிப்பாளர் கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு காயம்
104 படையினர், 80 பொதுமக்கள் ஒருமாதத்தில் பலி; 1021 பேர் காயம்
வாழைச்சேனையில் வெள்ளை வானில் வந்த ஆயுதபாணிகளால் இரு மாணவிகள் கடத்தல்
ஆனந்தசங்கரி, டக்ளஸ், சித்தார்த்தனுக்கு முதலமைச்சர் பதவியை வழங்குவது மற்றொரு பிரிவினைக்கு வழிவகுக்கும்
`உள்ளூராட்சி சபை தேர்தலின்போது மக்கள் சிந்தித்து வாக்களிக்க வேண்டும்'
சிறிலங்கன் எயார் லைன்ஸுடன் ஒப்பந்தம் முடிவடையும் விமானிகளுக்கு இந்திய விமான சேவைகளில் வேலை
மட்டக்களப்பு உள்ளூராட்சி சபைத்தேர்தலில் 5 ஆயிரம் பொலிஸார் பாதுகாப்பு கடமையில்
சந்தேகத்தின் பேரில் கைதான குடும்பஸ்தர் பொலிஸ் நிலையத்தில் விசாரணை
தமிழ் கூட்டமைப்பு எம்.பி.க்களின் வன்னிப் பயணத்தை தடுப்பதன் மூலம் படுகொலைகளை மூடி மறைக்க முயற்சி
ஈழத்தமிழரை படுகொலை செய்யும் இலங்கை இராணுவத்தின் தளபதியை இந்தியா அழைப்பதா?
விமான மூலம் போதைவஸ்து கடத்தி வந்த இந்திய பிரஜைக்கு ஆயுட்கால சிறை
தேர்தலுக்காக ஆயுதக் குழுவுடன் அரசு ஒப்பந்தம் செய்திருப்பது இலங்கைக்கு அவமதிப்பு
கச்சதீவில் துப்பாக்கி சூடு தமிழக மீனவர் பலி
கிழக்கு மாகாண பொலிஸ் நிலையங்களில் 175 தமிழ் பொலிஸார் நியமனம்
அவசர கால நீடிப்புக்கு 88 மேலதிக வாக்குகள்
முகத்துவாரம் குண்டுவெடிப்பு இரு ஆட்டோ சாரதிகள் கைது
விமான மூலம் போதைவஸ்து கடத்தி வந்த இந்திய பிரஜைக்கு ஆயுட்கால சிறை
அராலியில் இரு ஆலயங்களில் கொள்ளை சந்தேகத்தின் பேரில் நான்கு பேர் கைது
ரயில் மோதி யுவதி பலி மற்றொருவர் படுகாயம்
3 எம்.பி.க்களுக்கு 3 மாத கால விடுமுறை
யாழ். குடாநாட்டில் கோதுமைச் செய்கை
தேசிய கொள்கையை உருவாக்கப் போவதாக ஐ.தே.க., சு.க. மக்கள் பிரிவு இணைந்து அறிவிப்பு
புலம்பெயர்ந்த இந்திய வம்சாவளி பிள்ளைகளுக்கான புலமைப் பரிசில்
டஸ்கர் பொட்லிங் முகாமைத்துவ நிறுவனத்திற்கு எதிராக தோட்டத் தொழிலாளர்கள் வேலைநிறுத்தம்
புலிகளின் இரு சடலங்கள் வன்னிக்கு அனுப்பி வைப்பு
வவுனியாவில் கிளைமோரில் காயமடைந்தவர் உயிரிழப்பு
ஊடகவியலாளரின் வீட்டிற்குள் நுழைந்து தாக்குதல் முஸ்லிம் மீடியாபோரம் கடும் கண்டனம்
ஊடகவியலாளர் தாக்கப்பட்டதை கண்டித்து பிக்குவுக்கு எதிராக மாத்தறையில் ஆர்ப்பாட்டம்
அனைத்து கட்சி மாநாட்டில் அங்கத்துவம் வழங்குமாறு அகில இலங்கை தமிழர் கூட்டணி கோரிக்கை
பாலியல் குற்றச்சாட்டில் திருப்பியனுப்பப்பட்ட 108 இராணுவத்தினருக்கு சம்பளம் வழங்கப்படவில்லை
பாராளுமன்ற முன்னாள் செயலாளர் நாயகம் இரு ஓய்வூதியம் பெறுவது தொடர்பாக விசாரணை
தேங்காய், முட்டை விலை அதிகரிப்புக்கும் உலக சந்தை நிலைவரமா காரணம்?
மின்கட்டணம் அதிகரிக்கப்பட்டால் பொதுமக்கள் மிகமோசமான பொருளாதார சுமையை எதிர்கொள்வார்கள்
`இந்து ஆலய நிர்வாக கட்டமைப்பில் பெண்களின் பிரதிநிதித்துவம் உறுதிப்படுத்தப்படுவது வரவேற்கத்தக்கது'
சகல பதிவுகளுடனும் தங்கியிருந்த தமிழ் இளைஞர் பொலிஸாரால் கைதாகி பூசாவில் தடுத்து வைப்பு
 
 
 
   
 
 
   
Home - Important News - Foreign News - Sports News - Sinhala News - Articles - Editorial - DR - Cartoon - Archives - Obituaries
© 2008. All Rights Reserved. Thinakkural.com / Thinakural.com - Site By Evosof.com