* சபையில் கேள்வி எழுப்பினார் ஜே.வி.பி.எம்.பி.
ஐக்கிய நாடுகள் சமாதான படையில் இணைந்து ஹெயிட்டியில் பணியாற்றுவதற்காக இலங்கையிலிருந்து சென்று பாலியல் குற்றம் சுமத்தப்பட்டு மீண்டும் இலங்கைக்கு அனுப்பப்பட்ட இராணுவத்தினர் 108 பேரின் 4-1/2 மாதச் சம்பளம் இதுவரை வழங்கப்படவில்லையென ஜே.வி.பி. எம்.பி. அநுரகுமார திசாநாயக்கா தெரிவித்தார்.
பாராளுமன்றத்தில் கடந்த செவ்வாய்க்கிழமை வாய்மூல வினாக்களுக்கு விடையளிக்கும் நேரத்தில் துணைக் கேள்வியொன்றை எழுப்பிய அவர் இதுதொடர்பாக தெரிவித்ததாவது,
ஹெயிட்டி அரசாங்கம் நான்கரை மாதச் சம்பளத்தை இலங்கை அரசாங்கத்திற்கு வழங்கியுள்ள போதிலும் அரசாங்கம் இதுவரை தொழில் இழந்த இராணுவத்தினருக்கு அச்சம்பலத்தை வழங்கவில்லை.
இராணுவத்தினர் தாம் ஹெயிட்டிக்குச் செல்வதற்காக கடன்பட்டு பொருட்களை அடகும் வைத்திருந்தனர். எனினும் அவர்களுக்கு சம்பளம் வழங்கப்படாமையால் பெற்ற கடனை இராணுவத்தினரால் திருப்பிச் செலுத்த முடியாதுள்ளது.
ஹெயிட்டி இலங்கை அரசாங்கத்திற்கு பாலியல் குற்றம் சுமத்தப்பட்ட 108 இராணுவத்தினரினதும் சம்பளத்தை அனுப்பியுள்ள நிலையில் காலத்தை இழுத்தடிக்காது அச்சம்பளத்தை உடன் வழங்குமாறு நாம் கோருகிறோம் என்றார்.