வவுனியா குட்செட் வீதியில் கடந்த ஞாயிற்றுக்கிழமை மாலை இடம்பெற்ற கிளைமோர் தாக்குதலில் படுகாயமடைந்த ஒருவர் நேற்று முன்தினம் செவ்வாய்க்கிழமை இரவு உயிரிழந்துள்ளார்.
சைக்கிள் ஒன்றில் பொருத்தப்பட்டு வெடிக்க வைக்கப்பட்ட இந்தக் கிளைமோர் தாக்குதலில் ஆறு பொதுமக்களும் நான்கு படையினரும் படுகாயமடைந்தனர்.
ஆறு பொதுமக்களும் உடனடியாக வவுனியா ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு, அதில் ஆபத்தான நிலையிலிருந்த தாயும் மகனும் குருநாகல் ஆஸ்பத்திரியிலும் அநுராதபுரம் ஆஸ்பத்திரியிலும் அனுமதிக்கப்பட்டனர்.
இதில், அநுராதபுரம் ஆஸ்பத்திரியில் அவசர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சை பெற்று வந்த வவுனியா அரச செயலக புனர்வாழ்வுப் பிரிவு முகாமைத்துவ உதவியாளரான எஸ். கருணாகரன் என்பவர் செவ்வாய் இரவு மரணமடைந்தார்.
இவரது தாய் தொடர்ந்தும் ஆபத்தான நிலையில் குருநாகல் ஆஸ்பத்திரியில் சிகிச்சைபெற்று வருகிறார்.