இராணுவத்தினருடனான மோதல்களில் உயிரிழந்த இரு புலி உறுப்பினர்களின் சடலங்கள் வன்னிக்கு செவ்வாய்க்கிழமை பிற்பகல் கொண்டு செல்லப்பட்டது.
பதவியா பொலிஸாரினால் சர்வதேச செஞ்சிலுவைச் சங்கத்திடம் ஒப்படைக்கப்பட்ட புலி உறுப்பினரின் சடலம் செவ்வாய்க்கிழமை 2 மணியளவில் வன்னிக்கு கொண்டுசெல்லப்பட்டது.
மணலாறு பகுதியில் நடைபெற்ற மோதலில் உயிரிழந்த புலி உறுப்பினரின் சடலத்தை செஞ்சிலுவைச் சங்கம் பதவியா வைத்தியசாலையிலிருந்து பொறுப்பேற்றிருந்ததாக பொலிஸார் தெரிவித்தனர்.
வவுனியா வைத்தியசாலை சவச்சாலையில் வைக்கப்பட்டிருந்த இச்சடலம் வன்னிக்கு எடுத்துச் செல்லப்பட்டதாக சர்வதேச செஞ்சிலுவைச் சங்க அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
சடலத்தை புலிகள் உரிமைகோரியிருந்தனர். அதன் பிரகாரம் சடலம் வன்னிக்கு எடுத்துச் செல்லப்பட்டுள்ளது.
செட்டிகுளம் தட்டான்குளத்தில் இராணுவத்தினரால் சுட்டுக்கொல்லப்பட்ட புலி உறுப்பினரின் சடலம் வவுனியா வைத்தியசாலை சவச்சாலையில் இருந்து இதனையும் புலிகள் உரிமை கோரியதையடுத்து சர்வதேச செஞ்சிலுவைச் சங்கம் பொறுப்பேற்றதாக அதிகாரி ஒருவர் கூறினார்.