யாழ்ப்பாணக் குடாநாட்டில் கோதுமை பயிர்ச் செய்கை நல்ல பயனை அளித்துள்ளதாக கமநல சேவைத் திணைக்களம் தெரிவித்துள்ளது.
புலம்பெயர்ந்து வாழும் ஒருவர் வெளிநாட்டில் இருந்து எடுத்துவந்த கோதுமைப் பயிர் விதைகளை வடலியடைப்பு விவசாய சம்மேளனத் தலைவரிடம் வழங்கியிருந்தார்.
சம்மேளனத் தலைவர் அவற்றை பயிரிட்டிருந்தார். ஒரு மாத காலத்தில் இவை வளர்ச்சி பெற்றுள்ளன.
குடாநாட்டுக் காலநிலைக்கு அமைவாக கோதுமை செய்கையை இங்கு மேற்கொள்ளலாம் என விவசாயப் பகுதியினர் தெரிவித்துள்ளனர். நோய்களின் தாக்கம் இன்றி இவை வளர்ச்சியடைந்துள்ளன.
இப்பயிர்ச்செய்கை நல்ல அறுவடையைக் கொடுக்குமானால் இவ்வருட காலபோகத்தில் விவசாயிகள் கோதுமை செய்கையில் ஈடுபட வாய்ப்புள்ளதாகவும் விவசாயத்திணைக்களம் தெரிவிக்கின்றது.