மூன்று பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு 3 மாத கால விடுமுறை வழங்குவதற்கு சபை நேற்று புதன்கிழமை அனுமதி வழங்கியது.
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் எம்.பி.க்களான கஜேந்திரகுமார் பொன்னம்பலம், கே.சிவாஜிலிங்கம் ஆகியோருக்கு அக்கட்சியின் சார்பில் முன்மொழியப்பட்ட விடுமுறைப் பிரேரணைக்கு சபை அனுமதி வழங்கியது.
இவ்வாறே ஐ.தே.க. எம்.பி. அலிக் அலுவிஹாரவுக்கும் 3 மாத கால விடுமுறை வழங்குமாறு எதிர்க் கட்சி பிரதம கொரடா முன்வைத்த பிரேரணைக்கும் சபை அனுமதி வழங்கியது.