பேராதனையிலிருந்து கண்டி நோக்கி சென்ற ரயில் வண்டியில் மோதுண்ட இரு யுவதிகளில் ஒருவர் ஸ்தலத்திலே உயிரிழந்துள்ளதுடன் மற்றுமொரு யுவதி ஆபத்தான நிலையில் கண்டி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
நேற்று புதன்கிழமை தெய்யான்னவெல எனும் ரயில் பாதைக்கு அருகில் இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது.
இவ்விரு மாணவர்களும் மேலதிக வகுப்புகளுக்கு சென்று வீடு திரும்புவதற்காக ரயில் பாதையில் நடந்து வந்து கொண்டிருந்த போதே இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது.
இது தொடர்பான விசாரணைகளை கண்டி பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.