கொழும்பு முகத்துவாரம் பகுதியில் கடந்த வெள்ளிக்கிழமை இடம் பெற்ற தற்கொலைக் குண்டுத் தாக்குதல் தொடர்பாக ஆட்டோ சாரதிகள் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
முகத்துவாரம் அளுத்மாவத்தையிலுள்ள 3 மாடி வீடொன்றிலேயே கடந்த வெள்ளிக்கிழமை காலை இந்தத் தற்கொலைக் குண்டுத்தாக்குதல் இடம் பெற்றது.
இது தொடர்பாக விசாரணைகளை மேற்கொண்டு வரும் விசேட பொலிஸ் குழுவே இந்த இரு ஆட்டோ சாரதிகளையும் நேற்று கைது செய்துள்ளதாக பொலிஸ் பேச்சாளரான பிரதிப் பொலிஸ் மா அதிபர் கே.எஸ்.இலங்கக்கோன் தெரிவித்தார்.
இந்தச் சம்பவத்துடன் தொடர்புடைய புலிச் சந்தேக நபருக்கு ஒத்துழைப்பு வழங்கியதாகவே இவ்விருவரும் கைது செய்யப்பட்டதாக அவர் தெரிவித்தார். இதேவேளை இந்தச் சம்பவம் தொடர்பாக, ஏற்கனவே ஆறுபேர் கைது செய்யப்பட்டதும் தெரிந்ததே.