எம்.ஏ.எம்.நிலாம்
கிழக்கு மாகாண பொலிஸ் நிலையங்களில் கடமை புரிவதற்காக 175 தமிழ் பொலிஸார் நியமிக்கப்பட்டுள்ளனர்.
ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷவின் உத்தரவின் பேரில் கிழக்கில் வாழும் தமிழ் மொழி பேசும் மக்களின் தேவைகருதி இந்த நியமனம் வழங்கப்பட்டிருப்பதாக அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல தெரிவித்தார்.
இனப்பிரச்சினை விஸ்வரூபமெடுப்பதற்கு மொழிப்பிரச்சினையும் பிரதான காரணமெனச் சுட்டிக்காட்டிய அமைச்சர் ரம்புக்வெல்ல, வடக்கு கிழக்கில் மட்டுமன்றி நாட்டில் பரந்துபட்டு வாழும் தமிழ் பேசும் மக்களின் நலன் கருதி அரசு தமிழ் மொழி அதிகாரிகளை கூடுதலாக நியமிக்க நடவடிக்கை எடுத்து வருவதாகவும் அதன் ஆரம்பகட்டப்பணியாக கிழக்கு பொலிஸ் நிலையங்களுக்கு தமிழ் பொலிஸ் அதிகாரிகள் நியமிக்கப்பட்டிருப்பதாகவும் தெரிவித்தார்.
இந்த 175 பொலிஸ் அதிகாரிகளில் 125 பேர் ஆண்களெனவும் 50 பேர் பெண்பொலிஸாரெனவும் தெரிவிக்கப்பட்டது. இதற்காக விண்ணப்பம் கோரப்பட்டபோது 1200 விண்ணப்பங்கள் சமர்ப்பிக்கப்பட்டதாகவும் அவற்றிலிருந்தே இந்த 175 பேரும் தெரிவு செய்யப்பட்டு குறுகியகாலப் பயிற்சிக்குப்பின்னர் உடனடியாக சேவையிலீடுபடுத்தப்பட்டிருப்பதாகவும் அமைச்சர் தெரிவித்தார்.