* நாளை நள்ளிரவுடன் பிரசாரம் முடிவு
மட்டக்களப்பில் இடம்பெறவுள்ள உள்ளூராட்சி மன்ற தேர்தலின்போது 5 ஆயிரம் பொலிஸாரைக் கடமையில் ஈடுபடுத்தவுள்ளதாக சிரேஷ்ட பொலிஸ் மா அதிபர் காமினி நவரட்ண தெரிவித்தார்.
அங்கு எதிர்வரும் திங்கட்கிழமை இடம்பெறவுள்ள தேர்தல் பாதுகாப்புக் குறித்து கருத்துத் தெரிவிக்கையிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். இது குறித்து மேலும் தெரிவிக்கையில்;
மார்ச் 10 இல் இடம்பெறவுள்ள தேர்தலுக்கான பாதுகாப்பை உறுதி செய்வதற்கான சகல ஒழுங்குகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளன. அத்துடன் தேர்தலின் பின்னரும் இந்த பாதுகாப்பு ஒழுங்குகள் சீராகப் பேணப்படும்.
நாளை வெள்ளிக்கிழமை நள்ளிரவுடன் உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான பிரசார நடவடிக்கைகள் யாவும் முடிவடையவுள்ள நிலையில் இதுவரையான தேர்தல் பிரசார காலப்பகுதியில் பாரிய அசம்பாவிதங்கள் குறித்த விடயங்கள் எவையும் இடம்பெறவில்லை.
தற்போது அங்கு சுமார் 62 பொலிஸ் குழுக்கள் தேர்தல் ரோந்துப்பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளன. எனினும் தேர்தல் தினத்தன்று 5000 பொலிஸாரை கடமையில் ஈடுபடுத்தவுள்ளதாகவும் தெரிவித்தார்.