ரூபவாஹினிக் கூட்டுத்தாபன நூலகப் பிரிவின் உதவிப் பணிப்பாளர் ரஞ்சனி ஹேரத் நேற்று புதன்கிழமை மாலை தாக்குதலுக்கிலக்காகிக் காயமடைந்துள்ளார்.
நேற்று மாலை இவர் தனது கடமையை முடித்துக் கொண்டு வீடு திரும்பிக் கொண்டிருந்த போதே களனிப் பகுதியில் வைத்து கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டுள்ளார்.
களனிப் பகுதியில் இவர் பயணம் செய்த பஸ்ஸில் சென்ற காடையர்களே இவரைக் கூரிய ஆயுதத்தால் தாக்கியுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
தோள் மூட்டுப் பகுதியில் வெட்டுக் காயங்களுக்கிலக்கான நிலையில் இவர் பின்னர் கொழும்பு தேசிய வைத்தியசாலைக்குக் கொண்டு வரப்பட்டு சிகிச்சைக்குட்படுத்தப்பட்டார்.
ரூபவாஹினிக் கூட்டுத்தாபனத்திற்குள் அமைச்சர் மேர்வின் சில்வா குழுவினர் புகுந்து நடத்திய அட்டகாசத்தையடுத்து அண்மைக் காலமாக ரூபவாஹினிக் கூட்டுத்தாபனப் பணியாளர்கள் காடையர்களின் தாக்குதல்களுக்கு இலக்காகும் சம்பவங்கள் அதிகரித்து வருகிறது.
ரஞ்சனி ஹேரத் மீதான இந்தத் தாக்குதலை அனைத்து ஊடக அமைப்புகளும் வன்மையாகக் கண்டித்துள்ளன.