பணம் செலுத்தி ஒரு பயிற்சிக்குச் சில இளைஞர்களும் யுவதிகளும் சேர்ந்து கொண்டனர். பயிற்சியின் முடிவில் வேலை வழங்கப்படுமென்று உறுதியளிக்கப்பட்டமையினால் மிக ஆர்வத்துடன் இதில் பங்குபற்றினார்கள்.
பின்னர் ஒவ்வொரு மாதமும், பயிற்சி பெறும் மாணவர்களின் தொகை குறைந்து கொண்டே வந்தது. ஒருவர் பின் ஒருவராக கழன்றுவிடத் தொடங்கினர்.
ஒரு மாணவனின் தந்தை தனது சகாவுடன் பேசிக்கொண்டிருக்கையில் இந்த விவகாரமும் அடிபட்டது. "உங்களின் மகன் ஒரு பயிற்சிக்குச் சென்றாரே, அதை முடித்துவிட்டாரா?" என்று சகா கேட்டதும் மாணவனின் தந்தை இப்படி கூறினார்.
"மகன் பயிற்சி பெற்று முடித்தவுடன் வேலையும் கிடைக்குமென்று நம்பிக்கையில் பணத்தைக் கட்டினேன். பயிற்சிக் காலத்தில் அலவன்ஸ் எதுவும்" கிடையாது அதுதான் பரவாயில்லை. ஆனால் பயிற்சி எப்போது முடியுமென்று எவருக்குமே தெரியாது. மாதக் கணக்கில் பயிற்சி நீடித்துக் கொண்டே போவதால் ஒவ்வொருவராகக் கழன்றுவிடுகிறார்கள். இது ஒரு ஏமாற்றுவித்தை என்றே நினைக்கிறேன்" என்றார்.
எத்தனை காலந்தான் ஏமாறுவார் இந்த நாட்டிலே!