இரத்தினபுரியில் மீண்டும் சிக்குன் குன்யா (வைரஸ்) பரவும் அபாயம் கணாப்படுவதாகவும் பொதுமக்கள் எச்சரிக்கையாக இருக்குமாறும் வைத்திய அதிகாரிகள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
குருவிட்ட எரத்ன பகுதியில் கடந்த மாதம் முற்பகுதியில் 12 பேர் சிக்குன் குன்யா நோயினால் பாதிக்கப்பட்டனர். இவர்களுக்கு உரிய முறையில் சிகிச்சை அளிக்கப்பட்டதனால் இந்நோய் ஓரளவு கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்பட்டது.
இதனைத் தொடர்ந்து கொடக்கவல பகுதியிலும், புதுவித வைரஸ் காய்ச்சல் பரவ தொடங்கியதை அடுத்து அப்பகுதியிலும் இது குறித்து ஆய்வு நடத்தப்பட்டதில் சிக்குன் குன்யா நோய் பரவும் நுளம்புகள் இப்பகுதியில் காணப்படுவதாக கண்டறியப்பட்டன.
இதனைத் தொடர்ந்தே வைத்திய அதிகாரிகள் சிக்குன் குன்யா நோய் பரவும் அபாயம் குறித்து எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
எனவே, இரத்தினபுரி மாவட்ட வாசிகள் அனைவரும் தத்தமது சுற்றுச் சூழலை, முறையாகப் பேணி, நுளம்பு பெருகுவது தடை செய்யுமாறு கோரிக்கை விடுக்கப்படுகின்றது.