Thinakkural Tamil News Paper - The Independent Voice in Tamil

The Independent Voice in Tamil
Friday, March 07, 2008


Download latha tamil font
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
  Sri Lanka Forecast
 
 
 
 
 
 
 
HOT NEWS
Important News
தமிழர்களை இந்தியா கருணையோடு பார்ப்பதாக சிலர் மாயையில் உள்ளனர்
[07 - March - 2008] [Font Size - A - A - A]
* 13 ஆவது திருத்தம் ராஜிவின் சூழ்ச்சியென்கிறார் லால்காந்த

அரசியலமைப்பின் 13 ஆவது திருத்தம் ஜே.ஆர்.ஜெயவர்த்தனாவிற்கு உரியதல்ல. அது முன்னாள் இந்திய பிரதமர் ராஜீவ் காந்தியின் சூழ்ச்சியென ஜே.வி.பி. பாராளுமன்ற உறுப்பினர் லால்காந்த தெரிவித்தார்.

பாராளுமன்றத்தில் கடந்த புதன் கிழமை நடைபெற்ற அவசரகால சட்டப் பிரேரணை மீதான விவாதத்தில் உரையாற்றுகையிலேயே இவ்வாறு தெரிவித்த அவர் மேலும் கூறியதாவது;

1948 இல் நாம் சுதந்திரம் பெற்ற போதும் 1987 இல் இலங்கையை இந்தியா ஆக்கிரமித்தது. அப்போதிருந்த இடதுசாரிகளும் இந்தியாவின் ஆக்கிரமிப்பை நியாயப்படுத்தினர்.

ஜே.ஆர்.ஜெயவர்த்தனா இந்தியாவிடம் மண்டியிட்டபோது ஐ.தே.க.வின் சர்வதேச தோழர்கள் மௌனம் காத்தனர். இதனாலேயே இலங்கை- இந்தியா உடன்படிக்கை அமுலுக்கு வந்தது. இதனால் வடமராட்சி மீதான இராணுவ நடவடிக்கை முடிவுக்கு வந்தது.

இந்தியா அன்று இலங்கையை ஆக்கிரமித்திருக்காவிட்டால் புலிப் பயங்கரவாதிகளை 1987 இலேயே இராணுவ ரீதியாக தோற்கடித்திருக்கலாம்.

சம்பூரில் அனல் மின்சார நிலையம் அமைக்க இந்தியா நிபந்தனைகளை விதித்துள்ளது. இந்தியாவின் விசேட தலையீடுகள் பலவழிகள் மூலம் இலங்கையில் தொடருகிறது.

13 ஆவது திருத்தத்தை அமுல்படுத்தவும் இந்தியா அழுத்தம் பிரயோகிக்கிறது. 13 ஆவது திருத்தம் ஜே.ஆர்.க்கு உரியதல்ல. அது ராஜீவ் காந்தியின் சூழ்ச்சியாகும். வரதராஜப் பெருமாள் போன்ற கீழ்ப்படியும் புலியை வடகிழக்குக்கு நியமிக்க இந்தியா விரும்புகிறது.

தலையாட்டும் பொம்மைகளே வட, கிழக்கில் இருக்க வேண்டுமென இந்தியா விரும்புகிறது. இந்தியாவின் விருப்பத்திற்கு தலையாட்ட இங்கு சில பொம்மைகள் தயாராகவுள்ளன. இந்தியாவின் நோக்கம் சில அடிபணியும் புலிகளை வளர்த்தெடுப்பதேயாகும்.தமிழ் மக்களை இந்தியா கருணையோடு பார்க்கிறது என்ற மாயையில் சிலர் உள்ளனர். இது தவறானது. தேசியப் பாதுகாப்பு என்பது புலிகளுக்கெதிரான யுத்தத்தை தீவிரப்படுத்துவது மாத்திரமல்ல இலங்கைக்கு எதிரான சக்திகளையும் தோற்கடிப்பதற்கேயாகும். இதிலிருந்து அரசாங்கம் பாதை மாறுமேயானால் அவசரகாலச் சட்டத்திற்கு எதிராக ஜே.வி.பி. வாக்களிக்க வேண்டியேற்படும்.

Email this page Your Opinion Print this page
பிரிட்டிஷ் அமைச்சரின் விமர்சனம் தவறு ஜெனீவாவில் அமைச்சர் சமரசிங்க கவலை
பிரச்சினையை பெருப்பித்து காட்டுவதாக இலங்கை விசனம்
கடத்தல், காணாமல்போதல் சம்பவங்களுக்கு அரசாங்கமே பொறுப்பு கடும் குற்றச்சாட்டை முன்வைக்கிறது மனித உரிமைகள் கண்காணிப்பகம்
`கூட்டமைப்பு எம்.பி.க்களின் படுகொலைக்கான பொறுப்பை அரசு ஒருபோதும் தட்டிக்கழிக்க முடியாது'
புகழ்பெற்ற உறுப்பினர்களை உள்ளடக்கிய சர்வதேச சுயாதீனக் குழுவின் பணி நிறுத்தம்
ரூபவாஹினி ஊழியர்கள் அடையாள வேலைநிறுத்தம்
முன்னாள் பிரதியமைச்சரை தேடும் முயற்சியில் பொலிஸார் தீவிரம்
இலங்கை கடற்படையின் தாக்குதல்களால் தமிழக மீனவரின் வாழ்க்கை கேள்விக்குறி
40 சத வீதத்திற்கும் அதிகமான பாடசாலைகளில் முதலாம் ஆண்டு அனுமதியில் தொடர்ந்து இழுபறி
40 சத வீதத்திற்கும் அதிகமான பாடசாலைகளில் முதலாம் ஆண்டு அனுமதியில் தொடர்ந்து இழுபறி
13ஆவது திருத்தத்திலும் மேம்பட்ட தீர்வை முன்வைத்தால் இந்தியா வரவேற்கும்
பாதுகாப்புக்காக சார்க் உச்சிமாநாட்டை கொழும்பில்நடத்த அரசாங்கம் ஆராய்வு
உடரட்ட மெனிக்கேயில் வான் மோதி ஒருவர் பலி; இருவர் காயம்
சப்ரகமுவ மாகாண பாடசாலை மாணவர்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்த விஷேட நடவடிக்கை
இரத்தினபுரியில் மாலை நேரங்களில் கடும் மழை
13 ஆவது திருத்த அமுலாக்கம் இந்தியாவின் சூழ்ச்சியென இரு நாடுகளுக்குமிடையில் பிரச்சினையை ஏற்படுத்த முயற்சி
தமிழர்களை இந்தியா கருணையோடு பார்ப்பதாக சிலர் மாயையில் உள்ளனர்
சர்வதேச சமூகத்திடம் இலங்கை எதனையும் மறைப்பதில்லை
புலிகளின் தலைவருக்கு காயமும் இல்லை நீரிழிவால் கால் அகற்றப்படவுமில்லை
போரில் பலியாகும் இராணுவத்தினர் குறித்த சரியான விபரம் தெரிவிக்கப்படுவதில்லை
ஒரு குழந்தை திட்டத்தை கைவிட சீனா முடிவு?
டில்லியில் புலிகளுடன் நடத்தப்பட்ட பேரம் எம்.ஜி.ஆர். கொண்ட கோபம், அதன் விளைவுகள்
சமயபுரத்தில் கொள்ளை முயற்சியின் போது கடத்தப்பட்டவர் புதன் இரவு விடுவிப்பு
வட,கிழக்கிற்கு வெளியேயுள்ள தமிழ், முஸ்லிம் மாணவரின் எதிர்கால கல்வி நிலை கேள்விக்குறி
இரத்தினபுரியில் மீண்டும் சிக்குன் குன்யா பரவும் அபாயம்; விழிப்புடன் இருக்குமாறு வேண்டுகோள்
வவுனியாவுக்கு தடைசெய்யப்பட்ட பொருட்களை கொண்டு செல்ல முயன்ற மூவர் கைது
கம்பஹா மாவட்ட ஐ.தே.க. அமைப்பாளராக முன்னாள் அமைச்சர் பாருக்கை நியமிக்க முடிவு?
முன்னெச்சரிக்கை தடுப்பு நடவடிக்கைகளால் வடகிழக்கில் எயிட்ஸ் தொற்றும் அபாயம் குறைவு
தாக்குதல் சம்பவத்துடன் தொடர்புபட்டவர்களை கைதுசெய்யக் கோரி புத்தளத்தில் சத்தியாக்கிரகம்
மோட்டார் சைக்கிளில் வந்த இரு இளைஞர்கள் கடத்திய போதைவஸ்து; விபத்தில் கண்டுபிடிப்பு
அனைத்து கட்சி பிரதிநிதிகள் குழுவின் தீர்வு திட்ட யோசனை சர்வதேச சமூகத்தை ஏமாற்றும் முயற்சி
 
 
 
   
 
 
   
Home - Important News - Foreign News - Sports News - Sinhala News - Articles - Editorial - DR - Cartoon - Archives - Obituaries
© 2008. All Rights Reserved. Thinakkural.com / Thinakural.com - Site By Evosof.com