Thinakkural Tamil News Paper - The Independent Voice in Tamil

The Independent Voice in Tamil
Friday, March 07, 2008


Download latha tamil font
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
  Sri Lanka Forecast
 
 
 
 
 
 
 
HOT NEWS
Important News
பிரிட்டிஷ் அமைச்சரின் விமர்சனம் தவறு ஜெனீவாவில் அமைச்சர் சமரசிங்க கவலை
[07 - March - 2008] [Font Size - A - A - A]
பயங்கரவாதத்திற்கு எதிரான நடவடிக்கைகளை மேற்கொள்ளும் அதேசமயம், மனித உரிமைகளைப் பாதுகாப்பதற்காக இலங்கை அரசாங்கம் மேற்கொண்டுள்ள நடவடிக்கைகளை பாராட்டும் தன்மையற்ற விதத்தில் ஆபிரிக்க, ஆசியா மற்றும் ஐ.நா. விவகாரங்களுக்குப் பொறுப்பான பிரிட்டிஷ் அமைச்சர் மார்க் மல்லோ பிரவுணின் அறிக்கை அமைந்திருப்பதையிட்டு இலங்கை கவலையடைந்திருப்பதாக மனித உரிமைகள், இடர்முகாமைத்துவ அமைச்சர் மகிந்த சமரசிங்க கூறியுள்ளார்.

ஜெனீவாவில் மனித உரிமைகள் பேரவையின் ஏழாவது அமர்வில் இலங்கைத் தூதுக்குழுவுக்கு தலைமை தாங்கிச் சென்றுள்ள அமைச்சர் மகிந்த சமரசிங்க, பிரிட்டிஷ் அமைச்சர் பிரவுண் தெரிவித்திருந்த கருத்துத் தொடர்பாக நேற்று வியாழக்கிழமை காலை பதிலளித்திருக்கிறார்.

இது தொடர்பாக அமைச்சர் சமரசிங்க மேலும் தெரிவித்திருப்பதாவது;

ஐக்கிய இராச்சியத்தின் ஆபிரிக்கா, ஆசியா, ஐ.நா. விவகாரங்களுக்குப் பொறுப்பான அமைச்சரினால் தவறான முறையில் உள்வாங்கப்பட்ட அணுகுமுறையையிட்டு இலங்கை கவலையடைகின்றது. சர்வதேச சமூகத்தைச் சேர்ந்த பல உறுப்பினர்களின் கரிசனைகளை நாமும் பகிர்ந்து கொள்கிறோம். அவை எமக்கு அதிகளவு நம்பிக்கையை ஏற்படுத்துகின்றன. ஆனால், சில தனிப்பட்டவர்கள் இதனைக் கடினமான விடயமாகக் கருதுகின்றனர்.

இலங்கையில் இறுதியாக இடம்பெற்ற தேர்தல் முடிவுகள் துரதிர்ஷ்டவசமானவையென பிரிட்டிஷ் தமிழ் அமைப்பு மேற்கோள்காட்டுவதற்கு மல்லோ பிரவுண் பிரபு இடமளித்துள்ளமை கவலைக்குரியதாகும். இது தொடர்பாக பிரிட்டனிலுள்ள எமது உயர்ஸ்தானிகர் சம்பந்தப்பட்ட தரப்பினரின் கவனத்திற்குக் கொண்டுவந்திருந்தும் அந்த அறிக்கை தொடர்பாக இதுவரை எந்த எதிர்ப்பும் தெரிவிக்கப்படவில்லை.

பயங்கரவாதத்திற்கு எதிரான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும்போது மனித உரிமைகளுக்கு மதிப்பளிக்க வேண்டிய தேவையிருப்பதாக இன்று மேன்மைதங்கிய பிரபு உறுதிபடக் கூறினார். ஜனநாயகத்தை நீண்டகாலமாக நடைமுறைப்படுத்திவரும் இலங்கை இதனை நன்கறியும். காலனித்துவ பாரம்பரியத்தில் நடைமுறைப்படுத்தாத இந்த விடயத்தை அதாவது மனித உரிமைகள் தொடர்பான பல நிறுவனங்களை இலங்கை பல வருடங்களாக மேம்படுத்தி வருகின்றது. பயங்கரவாதத்தை கையாளும்போது பொதுமக்களுக்கு இடையூறுகள் ஏற்படுவதை தவிர்த்துள்ளது குறித்து எமது பதிவுகள் தொடர்பாக நாம் பெருமை கொள்கிறோம். பயங்கரவாதத்தை கையாளும் ஏனைய நாடுகள் போன்றில்லாமல் எமது நாட்டின் நிலைவரத்தையிட்டு பிரவுண் மறந்துவிட்டிருப்பாரென நாம் கருதுகின்றோம்.

இலங்கை அரசாங்கத்தின் தெளிவான நிலைப்பாட்டுக்கு முரணானதாக இலங்கையில் ஐ.நா. மனித உரிமை அலுவலகத்தை அமைப்பதற்கான முயற்சிகளுக்கு பிரவுண் பிரபு ஆதரவளித்துள்ளார். இதற்குப் பதிலாக பயங்கரவாதத்திற்கு எதிரான உண்மையான போராட்டம் தொடர்பாக எமது சகல பிரஜைகளினதும் மனித உரிமைகள் குறித்து இதய சுத்தியுடனான கரிசனையை முன்வைப்பது அதிகளவுக்கு ஆரோக்கியமானதாக அமையும்.

Email this page Your Opinion Print this page
பிரிட்டிஷ் அமைச்சரின் விமர்சனம் தவறு ஜெனீவாவில் அமைச்சர் சமரசிங்க கவலை
பிரச்சினையை பெருப்பித்து காட்டுவதாக இலங்கை விசனம்
கடத்தல், காணாமல்போதல் சம்பவங்களுக்கு அரசாங்கமே பொறுப்பு கடும் குற்றச்சாட்டை முன்வைக்கிறது மனித உரிமைகள் கண்காணிப்பகம்
`கூட்டமைப்பு எம்.பி.க்களின் படுகொலைக்கான பொறுப்பை அரசு ஒருபோதும் தட்டிக்கழிக்க முடியாது'
புகழ்பெற்ற உறுப்பினர்களை உள்ளடக்கிய சர்வதேச சுயாதீனக் குழுவின் பணி நிறுத்தம்
ரூபவாஹினி ஊழியர்கள் அடையாள வேலைநிறுத்தம்
முன்னாள் பிரதியமைச்சரை தேடும் முயற்சியில் பொலிஸார் தீவிரம்
இலங்கை கடற்படையின் தாக்குதல்களால் தமிழக மீனவரின் வாழ்க்கை கேள்விக்குறி
40 சத வீதத்திற்கும் அதிகமான பாடசாலைகளில் முதலாம் ஆண்டு அனுமதியில் தொடர்ந்து இழுபறி
40 சத வீதத்திற்கும் அதிகமான பாடசாலைகளில் முதலாம் ஆண்டு அனுமதியில் தொடர்ந்து இழுபறி
13ஆவது திருத்தத்திலும் மேம்பட்ட தீர்வை முன்வைத்தால் இந்தியா வரவேற்கும்
பாதுகாப்புக்காக சார்க் உச்சிமாநாட்டை கொழும்பில்நடத்த அரசாங்கம் ஆராய்வு
உடரட்ட மெனிக்கேயில் வான் மோதி ஒருவர் பலி; இருவர் காயம்
சப்ரகமுவ மாகாண பாடசாலை மாணவர்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்த விஷேட நடவடிக்கை
இரத்தினபுரியில் மாலை நேரங்களில் கடும் மழை
13 ஆவது திருத்த அமுலாக்கம் இந்தியாவின் சூழ்ச்சியென இரு நாடுகளுக்குமிடையில் பிரச்சினையை ஏற்படுத்த முயற்சி
தமிழர்களை இந்தியா கருணையோடு பார்ப்பதாக சிலர் மாயையில் உள்ளனர்
சர்வதேச சமூகத்திடம் இலங்கை எதனையும் மறைப்பதில்லை
புலிகளின் தலைவருக்கு காயமும் இல்லை நீரிழிவால் கால் அகற்றப்படவுமில்லை
போரில் பலியாகும் இராணுவத்தினர் குறித்த சரியான விபரம் தெரிவிக்கப்படுவதில்லை
ஒரு குழந்தை திட்டத்தை கைவிட சீனா முடிவு?
டில்லியில் புலிகளுடன் நடத்தப்பட்ட பேரம் எம்.ஜி.ஆர். கொண்ட கோபம், அதன் விளைவுகள்
சமயபுரத்தில் கொள்ளை முயற்சியின் போது கடத்தப்பட்டவர் புதன் இரவு விடுவிப்பு
வட,கிழக்கிற்கு வெளியேயுள்ள தமிழ், முஸ்லிம் மாணவரின் எதிர்கால கல்வி நிலை கேள்விக்குறி
இரத்தினபுரியில் மீண்டும் சிக்குன் குன்யா பரவும் அபாயம்; விழிப்புடன் இருக்குமாறு வேண்டுகோள்
வவுனியாவுக்கு தடைசெய்யப்பட்ட பொருட்களை கொண்டு செல்ல முயன்ற மூவர் கைது
கம்பஹா மாவட்ட ஐ.தே.க. அமைப்பாளராக முன்னாள் அமைச்சர் பாருக்கை நியமிக்க முடிவு?
முன்னெச்சரிக்கை தடுப்பு நடவடிக்கைகளால் வடகிழக்கில் எயிட்ஸ் தொற்றும் அபாயம் குறைவு
தாக்குதல் சம்பவத்துடன் தொடர்புபட்டவர்களை கைதுசெய்யக் கோரி புத்தளத்தில் சத்தியாக்கிரகம்
மோட்டார் சைக்கிளில் வந்த இரு இளைஞர்கள் கடத்திய போதைவஸ்து; விபத்தில் கண்டுபிடிப்பு
அனைத்து கட்சி பிரதிநிதிகள் குழுவின் தீர்வு திட்ட யோசனை சர்வதேச சமூகத்தை ஏமாற்றும் முயற்சி
 
 
 
   
 
 
   
Home - Important News - Foreign News - Sports News - Sinhala News - Articles - Editorial - DR - Cartoon - Archives - Obituaries
© 2008. All Rights Reserved. Thinakkural.com / Thinakural.com - Site By Evosof.com