அவுஸ்திரேலிய கப்டன் ரிக்கி பொண்டிங் ஓய்வெடுத்துக் கொள்ள வேண்டுமென்று அந்நாட்டு கிரிக்கெட் விமர்சகர்கள் தெரிவித்துள்ளனர்.
இந்தியாவுக்கு எதிரான தொடரில் ரிக்கி பொண்டிங் சிறப்பாக விளையாடவில்லை. 10 ஒருநாள் போட்டிகளில் அவர் 191 ஓட்டங்களை மட்டுமே குவித்தார்.
அவுஸ்திரேலியாவின் தோல்விக்குப் பொண்டிங்கின் மோசமான ஆட்டமே ஒரு காரணம் என்று கூறப்படுகிறது.
இந்நிலையில், அவுஸ்திரேலிய கிரிக்கெட் விமர்சகர்கள் பொண்டில் ஓய்வெடுத்துக் கொள்ள வேண்டுமென்று கூறியுள்ளனர். ஓட்டம் குவிக்க முடியாமல் தடுமாறி வரும் அவர் முக்கியமான 3 ஆவது நிலை வீரராக களமிறங்கியிருக்கக் கூடாதென்றும் விமர்சகர்கள் தெரிவித்துள்ளனர்.
இந்தியன் பிரிமியர் லீக் போட்டிகளில் விளையாட ஒப்பந்தமாகியுள்ள பொண்டிங் அதிலிருந்து விடுபட்டு ஒய்வெடுத்துக் கொள்ள வேண்டுமென்றும் விமர்சகர்கள் தெரிவித்துள்ளனர்.