Thinakkural Tamil News Paper - The Independent Voice in Tamil

The Independent Voice in Tamil
Friday, March 07, 2008


Download latha tamil font
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
  Sri Lanka Forecast
 
 
 
 
 
 
 
HOT NEWS
Sports news
முதல் இனிங்ஸில் நியூஸிலாந்து 470 ஓட்டங்கள் இங்கிலாந்து 2 விக்கெட்டுக்கு 87 ஓட்டம்
[07 - March - 2008] [Font Size - A - A - A]
இங்கிலாந்துக்கு எதிராக நேற்று முன்தினம் தொடங்கிய முதலாவது டெஸ்டின் முதல் இனிங்ஸில் நியூஸிலாந்து அணி 470 ஓட்டங்களைப் பெற்றுள்ளது.

இங்கிலாந்து கிரிக்கெட் அணி நியூசிலாந்தில் சுற்றுப் பயணம் செய்து விளையாடி வருகிறது. நியூஸிலாந்து அணிக்கு எதிரான ஒரு நாள் தொடரை இழந்து விட்ட இங்கிலாந்து அடுத்து 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்கிறது. முதலாவது டெஸ்ட் போட்டி ஹமில்டனில் நேற்று முன்தினம் தொடங்கியது. நாணயச் சுழற்சியில் வென்ற நியூசிலாந்து கப்டன் வெட்டோரி முதலில் ஆடுவதாக அறிவித்தார்.

இதன்படி முதல் இனிங்ஸை தொடங்கிய நியூசிலாந்து அணி முதல் நாள் முடிவில் 6 விக்கெட் இழப்புக்கு 282 ஓட்டங்கள் எடுத்தது. தனது முதலாவது சதத்தை தவறவிட்ட தொடக்க ஆட்டக்காரர் ஜேமி ஹாவ் 92 ஓட்டங்களில் (12 பவுண்டரி) ஆட்டமிழந்தார். தனது கடைசி டெஸ்ட் தொடரில் பங்கேற்றிருக்கும் முன்னாள் கப்டன் பிளமிங் 41 ஓட்டங்களில் வெளியேறினார்.

வழக்கம் போல் அதிரடி காட்டிய மெக்கலம் கடைசிக்கு முந்திய ஓவரில் தனது விக்கெட்டை பறிகொடுத்தார். அவர் 55 பந்துகளில் 5 பவுண்டரி, 2 சிக்சருடன் 51 ஓட்டங்கள் விளாசினார். ரோஸ் டெய்லர் (54 ஓட்டங்கள்), வெட்டோரி (4 ஓட்டங்கள்) ஆகியோர் களத்திலிருந்தனர்.

2 ஆம் நாள் மதியபோசன உணவு இடைவேளையின் பின் நியூசிலாந்து அணி சகல விக்கெட்டுகளையும் இழந்து 470 ஓட்டங்களைப் பெற்றது. இதில் ரெய்லர் -120, வெற்ரோறி -88 ஓட்டங்களைப் பெற்றனர்.

இங்கிலாந்து தரப்பில் சைற்பொட்டம் 4 விக்கெட்டும் ஹோக்கார்ட், ஹார்மிசன், பனேசர், ஆகியோர் தலா ஒரு விக்கெட்டும் கொலிங்வூட் இரு விக்கெட்டு வீழ்த்தினார்கள்.

முதல் நாளில் இங்கிலாந்து அணியின் நட்சத்திர வீரர் இயன் பெல் எதிர்பாராத விதமாக காயமடைந்தார். துடுப்பாட்ட வீரர் அருகில் களத்தடுப்பு செய்தபோது வலது மணிக்கட்டில் பந்து தாக்கியது. வலியால் துடித்த அவரை உடனடியாக ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு அவருக்கு `எக்ஸ்ரே' எடுத்து பரி சோதனை செய்யப்பட்டது. இதில் எலும்பு முறிவு எதுமில்லை என்பது தெரியவந்தது. ஆனால், காயம் பெரிதாக இருப்பதால் அவரால் துடுப்பெடுத்தாட இயலுமா என்பதில் சந்தேகம் நிலவுகிறது.

2 ஆம் நாள் ஆட்டநேர முடிவில் இங்கிலாந்து அணி முதல் இனிங்ஸில் 2 விக்கெட் இழப்புக்கு 87 ஓட்டங்களைப் பெற்றது. கப்டன் வோகன் ஆட்டமிழக்காது 44 ஓட்டங்களையும் குக் 38 ஓட்டங்களையும் பெற்றனர். பந்துவீச்சில் மாட்டின் 2 விக்கெட்டுக்களைக் கைப்பற்றினார்.

Email this page Your Opinion Print this page
முதல் இனிங்ஸில் நியூஸிலாந்து 470 ஓட்டங்கள் இங்கிலாந்து 2 விக்கெட்டுக்கு 87 ஓட்டம்
இந்திய அணி நாடுதிரும்பியது மும்பையில் பிரமாண்டமான வரவேற்பு
அவுஸ்திரேலிய வீரர்களுக்கு போதிய ஓய்வு அவசியம் அதிக போட்டிகளால் வீரர்கள் களைப்படைந்துவிட்டனர்
இறுதிவெற்றிக்களிப்பு இந்திய அணிக்கே அவுஸ்திரேலிய பத்திரிகைகள் பெரும் பாராட்டு
பொண்டிங்கிற்கு ஓய்வு தேவை; விமர்சகர்கள் வற்புறுத்து
இந்திய வீரர்களே ஆதிக்கம்
 
 
 
   
 
 
   
Home - Important News - Foreign News - Sports News - Sinhala News - Articles - Editorial - DR - Cartoon - Archives - Obituaries
© 2008. All Rights Reserved. Thinakkural.com / Thinakural.com - Site By Evosof.com