இஸ்ரேல் பாராளுமன்ற பெண் உறுப்பினர்களும் சட்ட மேதைகளும் தங்களை தற்காத்துக் கொள்ளும் தற்காப்புக் கலைகளை பயிலுமாறு கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளனர்.
இந்த வேண்டுகோளை அந்நாட்டு பாராளுமன்ற பொதுச் செயலர் அவி பாலாஷிநிக்கோ விடுத்துள்ளார்.
இஸ்ரேல் நாட்டின் பாரம்பரியமிக்க தற்காப்புக் கலையாக `கரவ் மகா' விளங்குகிறது. இதனை அந்நாட்டு பாராளுமன்ற உறுப்பினர்கள் சிலர் பயின்று வருகின்றனர்.
இந்தக் கலை குறித்த பயிற்சி முகாமில் கலந்து கொண்ட பாராளுமன்ற பெண் உறுப்பினர் ஒருவர், இந்தக் கலை மிகவும் பயனுள்ளதாக இருப்பதுடன் தனது வலிமையும் வேகமும் இதன்மூலம் அதிகரித்து இருப்பதாகக் கூறினார்.
எனவே, பெண்கள் பாலியல் ரீதியான தொந்தரவுகளில் இருந்து தங்களைக் காத்துக் கொள்ள இவ்வாறான தற்காப்புக் கலையைப் பயில்வது அவசியம் எனவும் அவர் தெரிவித்தார்.