Thinakkural Tamil News Paper - The Independent Voice in Tamil

The Independent Voice in Tamil
Saturday, March 08, 2008


Download latha tamil font
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
  Sri Lanka Forecast
 
 
 
 
 
 
 
HOT NEWS
Foreign News
அமெரிக்காவில் குறைவடைந்து வரும் மத நம்பிக்கைகள், மத மாற்றம் அதிகரிப்பு
[08 - March - 2008] [Font Size - A - A - A]
அமெரிக்காவில் மத நம்பிக்கை குறைவடைந்து மதம் மாறுபவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதாக ஆய்வொன்று தெரிவிக்கின்றது.

மொத்தத்தில் 44 வீதம் பேர் மத நம்பிக்கை இன்றியோ அல்லது மதம் மாறியோ இருக்கின்றனரெனத் தெரிவிக்கும் இவ் ஆய்வு மேலும் தெரிவித்துள்ளதாவது;

அமெரிக்காவில் மதப்பிடிப்பு வேகமாக குறைந்து வருகிறது. தங்கள் பிள்ளைகள் மத நம்பிக்கை இல்லாமல் இருப்பதையோ மதம் மாறுவதையோ 25 சதவீதமான பெற்றோர் அனுமதிக்கின்றனர். அமெரிக்காவில் கத்தோலிக்க, புரட்டஸ்தாந்து உட்பட்ட கிறிஸ்தவர்கள் மற்றும் யூத மதத்தினரும் மதப்பிடிப்புகளை இழந்து வருகின்றனர்.

இளைய தலைமுறையினரில் பெரும்பாலானோர் மதம் சம்பந்தப்பட்ட நம்பிக்கைகளில் விழிப்புணர்வுடன் கேள்விகளை கேட்க ஆரம்பித்துவிட்டனர். அவர்களுக்கு தெளிவான விளக்கம் கிடைக்காததால் அவர்களின் நம்பிக்கை மாறுகிறது என்றும் கூறுகின்றனர். இது தொடர்பாக இணையத்தின் மூலம் 35 ஆயிரம் பேரிடம் கேள்விகள் கேட்கப்பட்டிருந்தது. அவர்கள் அளித்த பதிலில் இருந்து கத்தோலிக்க பிரிவில் தான் அதிக இழப்பு ஏற்பட்டுள்ளது தெரியவந்துள்ளது.

மத நம்பிக்கை இல்லாதவர்கள் எண்ணிக்கையும் கடந்த சில ஆண்டாக அதிகரித்து வருகிறது. அடுத்த சில ஆண்டுகளில் 35 வயதில் உள்ளவர்களில் மத நம்பிக்கை உள்ளவர்கள் வெகு குறைவாகி விடுவர் என்று கணிக்கப்படுகிறது. அமெரிக்காவை பொறுத்தவரை மதத்துக்கும் அரசியலுக்கும் நெருங்கிய தொடர்பு உண்டு. ஆனால், கல்வியுடன் மதத்துக்கு தொடர்பில்லை. அதுபோல, மென்பொருள் உட்பட திறமைசார்ந்த பணியாளர்களிடையே மதத்துக்கு தொடர்பில்லை. அதனால்தான் மத நம்பிக்கை மதப்பிடிப்பு வெகுவாக குறைந்து வருகிறது.

அமெரிக்கர்களில் 8 சதவீதம் பேர் அவர்கள் சார்ந்த மதத்தின் மீது எந்தவொரு பிடிப்பும் இல்லாமல் உள்ளனர். அதற்காக மதம் மாறவில்லை. வாழ்க்கைக்கு மதம் தேவையாக இருக்கலாம். ஆனால், அன்றாட வாழ்க்கைக்கு முக்கியமில்லை என்று அவர்கள் கூறுகின்றனர். அமெரிக்காவில் பணக்காரர்கள் வரிசையில் முதலிடத்தை யூத இனத்தவர் பிடித்துள்ளனர். அடுத்து இதுவரை இருந்து கிறிஸ்தவர்கள் மூன்றாம் இடத்துக்கு தள்ளப்பட்டுள்ளனர். மூன்றாம் இடத்தில் இருந்த இந்துக்கள் இரண்டாம் இடத்தை பிடித்துள்ளனர். இவ்வாறு ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Email this page Your Opinion Print this page
குடியரசுக் கட்சி வேட்பாளர் மக்கெய்னைவிட ஒபாமா, ஹிலாரிக்கு அதிகளவு செல்வாக்கு
மலேசிய பிரதமர் தேர்தல் அதிகாரியின் வீட்டின் மீது வர்ணப்பூச்சு வீசி தாக்குதல்
சர்தாரி மீதான ஊழல் வழக்குகள் ஊழல் தடுப்பு நீதிமன்றால் இரத்து
நான்கு மாதத்துக்குப் பின்னர் சூரியனைக் கண்ட லாங்கியர்பைன் தீவு மக்கள்
அமெரிக்காவில் இந்திய வம்சாவளி ஆளுநரின் அதிரடி மாற்றங்கள்
அமெரிக்காவில் குறைவடைந்து வரும் மத நம்பிக்கைகள், மத மாற்றம் அதிகரிப்பு
தற்காப்புக் கலைகளைப் பயிலும் இஸ்ரேல் பாராளுமன்ற பெண் உறுப்பினர்கள்
 
 
 
   
 
 
   
Home - Important News - Foreign News - Sports News - Sinhala News - Articles - Editorial - DR - Cartoon - Archives - Obituaries
© 2008. All Rights Reserved. Thinakkural.com / Thinakural.com - Site By Evosof.com