* கருத்துக் கணிப்பீட்டின் பெறுபேறு
அமெரிக்க ஜனாதிபதித் தேர்தல் வேட்பாளருக்கான தெரிவில் குடியரசுக் கட்சியின் வேட்பாளராக ஜோன் மைக்கெய்ன் கட்சியின் வேட்பாளராக ஜோன் மைக்கெய்ன் தெரிவு செய்யப்படுவது உறுதியாகியுள்ள போதும் ஜனநாயகக் கட்சி போட்டியாளர்களான பராக் ஒபாமாவும் ஹிலாரி கிளின்டனும் மைக்கெய்னை விட முன்னிலையில் இருப்பதாக கருத்துக் கணிப்பொன்று தெரிவிக்கின்றது.
வாஷிங்டன் போஸ்ட் என்றும் பத்திரிகையால் நடத்தப்பட்ட கருத்துக்கணிப்பில் பராக் ஒபாமா மக்கெய்னை விட 52-40 என்ற வீதத்தில் 12 வீதம் முன்னிலையிலும் ஹிலாரி மக்கெய்னை விட 50-44 என்ற வீதத்தில் 6 வீதம் முன்னிலையிலும் உள்ளதாக தெரிவிக்கப்படுகிறது .
டெக்ஸாஸ் மற்றும் ஹியேர் மாநிலங்களில் பெற்ற வெற்றியால் குடியரசுக் கட்சியின் வேட்பாளராக மக்கெய்ன் தெரிவு செய்யப்படுவது உறுதியாகியுள்ள நிலையில், ஐனாதிபதி தேர்தலை நோக்கி தனது கவனத்தை திசைதிருப்பியுள்ளார் மக்கெய்ன்.
ஆனால் ஐனநாயகக் கட்சி வேட்பாளருக்கான தெரிவில் ஹிலாரிக்கும் ஒபாமாவுக்குமிடையில் தொடர்ந்தும் கடும் போட்டி நிலவி வருகிறது.
இதே வேளை, நேற்று முன்தினம் வெள்ளை மாளிகையில் இடம்பெற்ற விருந்துபசாரத்தின் போது அமெரிக்க ஜனாதிபதி ஜோர்ஜ் டபிள்யூ புஷ் மக்கெய்னுக்கு தனது ஆதரவைத் தெரிவித்துள்ளார்.
புஷ் மக்கெய்னுக்கு ஆதரவளித்துள்ள போதிலும் புஷ்ஷின் நிர்வாகத்தின் மீது வெறுப்புற்றிருக்கும் மக்கள் மக்கெய்னை நிராகரிக்கும் சாத்தியம் உள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
அடுத்து 71 வயதான மக்கெய்னுக்கு ஜனாதிபதி தேர்தலில் வயதும் ஒரு தடையை ஏற்படுத்துமெனக் கருதப்படுகிறது.
நாட்டை வழிநடத்துவதற்கான அனுபவம் ஒபாமாவுக்கு போதாது என்ற ரீதியில் மக்கெய்ன் பிரசாரங்களை முன்னெடுத்து வருகின்ற போதிலும் 80 வீதமான மக்கள் ஒபாமாவின் புதிய வியூகம் மற்றும் சிந்தனைகளுக்கு ஆதரவளிப்பதாக தெரிவிக்கப்படுகிறது.
பொருளாதாரம் , சுகாதாரம் ,குடிவரவு, மற்றும் அரசின் கொள்கைகள் போன்ற முக்கிய விடயங்கள் தொடர்பில் மக்கெய்னை விட ஒபாமாவுக்கு அதிகளவு ஆதரவு இருப்பதாக இக் கருத்துக் கணிப்பு தெரிவித்துள்ளது.